கர்நாடகாவில் கல்லூரி மாணவர்கள் அரங்கேற்றிய முத்த விளையாட்டு இணையத்தில் வைரலாகிய நிலையில் மாணவிக்கு முத்தமிட்ட சக மாணவரை காவல்துறை கைது செய்தது.
கர்நாடக மாநிலம் மங்களூரில் தனியார் கல்லூரி ஒன்றில் படிக்கும் மாணவ மாணவிகள் புதிதாக முத்த விளையாட்டு போட்டியை நடத்தி உள்ளனர். அதன்படி போட்டியில் பங்குபெற்று தோற்றவர் முத்தம் தர வேண்டும் என்பது விதி.
இந்நிலையில் போட்டியில் கலந்து கொண்ட மாணவர் ஒருவர் சக மாணவி ஒருவருக்கு முத்தமிட்டுள்ளார். இதனை இன்னொரு மாணவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் வைரலாக்கியுள்ளார். இந்த வீடியோ வைரலானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த முத்த விளையாட்டு போட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மாணவிக்கு முத்தமிட்ட மாணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தற்போது நடைபெறவில்லை என்றும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது என்றும் சில மாணவர்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர் என்றும் மங்களூர் போலீஸ் கமிஷனர் சசிகுமார் கூறியுள்ளார்.