முகத்தில் உள்ள Blackheads,Whiteheads போக்க magical remedy just 5 Minutes
முகத்தில் வரும் கட்டிகள் முகப்பருக்களுக்கான அடையாளங்களாகும். முகப்பருக்கள் தோலின் எண்ணெய் சுரப்பிகளையும், மயிா்க்கால்களையும் பாதிப்படையச் செய்கின்றன. நமது தோலின் சுரப்பிகள் எண்ணெய் அல்லது மெழுகு போன்று இருக்கும் சீபமை (sebum) உற்பத்தி செய்கின்றன.

சீபம் அதிகமாகும் போது முகத்தில் பருக்கள் வருகின்றன. பொதுவாக பெண்களுக்கு அவா்கள் பருவம் அடையும் போது முகப்பருக்கள் வருகின்றன. ஆனால் அசுத்தமான காற்று மற்றும் மோசமான பருவநிலைகள் இருந்தால் எந்த வயதிலும் யாருக்கும் முகப்பருக்கள் வரலாம்.முகப்பரு இருக்கும் பகுதியைச் சுற்றி சிவப்பாக இருக்கும். பின் அந்த இடத்தில் வீக்கம் ஏற்படும். ஆனால் எந்தக் காரணத்தைக் கொண்டும் முகப்பருக்களைக் உடைக்கக்கூடாது அல்லது கிள்ளக்கூடாது.
அவ்வாறு செய்தால் முகத்தின் மற்ற பகுதிகளிலும் பருக்கள் பரவ வாய்ப்பாக அமையும். பொதுவாக முகம், முதுகு, மாா்பு மற்றும் தோள்பட்டை ஆகிய பகுதிகளில் பருக்கள் வருகின்றன. பருக்கள் முதலில் நமது தோலில் ஒரு சிறிய புடைப்பு போல் தோன்றும்.

அந்த புடைப்பில் சீழ் நிறைந்து இருக்கும். சில பருக்களை நமது கைகளால் உடைத்து விட்டால் அவை நமது தோலில் வடுக்களை ஏற்படுத்தும். பருக்கள் வராமல் இருக்க வேண்டும் என்றால் நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும்.
மேலும் நம்மை நாமே சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். நமது தோலின் வகைகளுக்கு ஏற்ப பலவகையான பருக்கள் உள்ளன. அதற்கு பல காரணங்கள் உள்ளன. சரி வாருங்கள் முகத்தில் உள்ள Blackheads,Whiteheads போக்க magical remedy 😍 just 5 Minutes