திடீர் என சமூக வலைதளத்திற்கு என்ட்ரி கொடுத்த மீரா ஜாஸ்மின் தனது மொத்த உடல் எடையையும் கரைத்து எழும்பும் தோலுமாக மாறிவிட்டார்.
சண்டைக்கோழி படத்தில் விஷாலுக்கு ஜோடியாக வந்து ரசிகர் பட்டாளத்தை பெற்றவர். ஆயுத எழுத்து, ரன்,உள்ளிட்ட படங்களிலும் கவர்ந்த இவர் தன் கவர்ச்சியாலும் மலைக்க வைத்திருந்தார்.
மலையாள திரை உலகிலும் பிரபலமாக இருந்து வந்த மீரா ஜாஸ்மின் திடீரென திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து ஒதுங்கி விட்டார்.
இதன் பின்னர் பல ஆண்டுகளாக கேமராவிற்கு முன் வராத இவர் சில மாதங்களுக்கு முன்னர் நகைக்கடையில் ரசிகர்களால் புகைப்படம் எடுக்கப்பட்டார்.
அந்த புகைப்படத்தில் மிகவும் உடல் எடை கூடி அடையாளமே தெரியாமல் மாறி இருந்தார். இதை அடுத்து திடீர் என சமூக வலைதளத்திற்கு என்ட்ரி கொடுத்த மீரா ஜாஸ்மின் தனது மொத்த உடல் எடையையும் கரைத்து ஸ்லிம்மாக மாறிவிட்டார்.