குறட்டை விடுவது ஒரு சிரிப்பிற்குறிய விஷயம் கிடையாது. இதனால் உலகில் உள்ள பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவை குறட்டை விடுபவர்கள் தங்களை மட்டுமல்லாமல், தங்களுடைய துணைவர்களையும் பாதிக்கின்றனர். ஆண் பெண் யாராக இருந்தாலும் குறட்டை விடுவது இருவருக்கும் வரும் பிரச்சனையாக அமைகின்றது.
இதை செய்தோம் என்று யாரேனும் கூறும் போது மிகுந்த இக்கட்டான நேரத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குறட்டை வருவதற்கு பல காரணங்கள் உண்டு என்பது தான் இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயமாகும். உடல் பருமன், தொண்டை அடைப்பு மற்றும் தொண்டை தசையிலுள்ள தளர்வு மற்றும் வீக்கம் என பலவற்றை குறட்டைக்கு காரணமாக சொல்லலாம்.
மூச்சு விடும் போது தொண்டையில் உள்ள மெல்லிய தசை ஆடுவதால் குறட்டை சத்தம் வருகின்றது. இதுப்போன்று சுவாரஸ்யமாவை: குறட்டை சத்தம் அதிகமா இருக்கா? அத நிறுத்த இதோ சில டிப்ஸ்… குறட்டை விடுவது நமக்கு மிகுந்த வருத்தம் தரும் காரியமாகும். சில தம்பதியர் குறட்டையினால் பிரிந்து விடுகின்றனர் என்பது கவலைப்படும் விஷயமாகும்.
ஆனால் இது ஒரு சிறிய பிரச்சனை தான். நமது உணவு பழக்கத்தில் ஒரு சில மாற்றங்கள் செய்தால் போதும் நிச்சயம் குறட்டையை விரட்ட முடியும். குறட்டையை கட்டுப்படுத்தும் உணவுகளை பற்றி இங்கு கொடுத்துள்ளோம். இந்த குறிப்புகளைப் பயன்படுத்தி குறட்டையை நிறுத்தும் பணியில் எளிதில் செய்யலாம். குறட்டையை விரட்ட பயன்படுத்த வேண்டிய இந்த குறிப்புகளில், உணவுப் பழக்கத்தை மேலாண்மை செய்வது முக்கியமான இடத்தைப் பெறுகிறது.