பிலவ ஆண்டின் கடைசி நாள் – அதிர்ஷ்டம் இனி எந்த ராசிக்கு?

தமிழ் புத்தாண்டு இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில், ஏப்ரல் மாதத்தில் பல பெரிய கிரகங்களின் ராசியில் மாற்றம் ஏற்படப் போகிறது.

அதன்படி இந்த தமிழாண்டின் கடைசி திங்கட்கிழமை, ஏப்ரல் 11 எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுபமாகவும் எந்த ராசிக்காரர்களுக்கு அசுபமாகவும் இருக்கவுள்ளது என்பதை பற்றி பார்ப்போம்.
மேஷம்

மேஷ ராசிக்கு குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற கருத்துக்கள் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அரசு சார்ந்த செயல்பாடுகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும்.
ரிஷபம்

ரிஷப ராசிக்கு தேவையற்ற கோபம் மற்றும் வாக்குவாதங்களை தவிர்க்கவும். மனதில் ஏமாற்றம் ஏற்படலாம், ஆனால் நிதானமாக இருங்கள்.

உணவில் ஆர்வம் அதிகரிக்கும். மிதுனம் மிதுன ராசிக்கு கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய ஆபரணங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது பற்றிய சிந்தனைகள் ஏற்படும்.

நண்பர்களின் உதவியால் வியாபார ரீதியான நெருக்கடிகள் குறையும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

கடகம்

கடக ராசிக்கு உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பொறுமையாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
சிம்மம்

சிம்ம ராசிக்கு மனதில் அமைதி ஏற்படும். பொறுமை குறையும். மனம் கலங்கலாம். பணியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கன்னி

கன்னி ராசிக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். தொழிலில் இருந்த பிரச்சனைகள் தீரும். வியாபாரத்தை மேம்படுத்த தந்தையிடமிருந்து பணம் கிடைக்கும்.
துலாம்

துலா ராசிக்காரர்களுக்கு மன ரீதியான பிரச்சனைகளில் இருந்து நிவர்த்தி கிடைக்கும். பணியிடத்தில் உழைப்பு அதிகரித்தாலும் மதிப்பும் உயரும்.

வாழ்க்கைத்துணையிடம் சற்று கவனமாக இருக்கவும்.
விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தந்தையின் உடல்நிலை மேம்படும். வருமானம் அதிகரிப்பதால் செலவுகளை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டாம். சேமிப்பு அவசியம்.
தனுசு

தனுசு ராசிக்கு படிப்பில் மேன்மை மற்றும் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன. வருமானம் அதிகரிக்கும் என்றாலும் செலவும் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவும் அன்பும் கிடைக்கும்.
மகரம்

மகரம் ராசிக்கு, உடல்நிலையில் ஏற்ற தாழ்வுகள் காணப்படும். பணியிடத்தில் அதிகாரிகளின் நல்லெண்ணத்தைப் பெறலாம்.

கூடுதல் பொறுப்புகளை ஏற்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
கும்பம்

கும்ப ராசிக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது. உத்தியோகத்தில் முன்னேற்றமும், பதவி உயர்வும் கிடைக்கும். குடுபத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

வருமானம் அதிகரிக்கும், அதற்கேற்றாற்போல செலவும் அதிகமாக இருக்கும்.
மீனம்

மீன ராசிக்கு இனி வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கலாம், ஆனால் அதற்கு வாயைக் கட்டுப்படுத்துவது அவசியம்.

அதிகப்படியான கோபத்தையும் ஆர்வத்தையும் தவிர்க்கவும். வருமானம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

Shares