அதிகாலையில் எழுங்கள், உடலும் மனமும் உற்சாகமாகும், அப்படி எழுவதனால், நேரம் போதவில்லை என்று பரபரப்பாக அலுவலகத்துக்கோ, பள்ளி கல்லூரிக்கோ செல்லும் வீட்டின் அங்கத்தினர்கள் அங்கலாய்க்கும், காலை நேர அவசரத்துக்கு, நிரந்தர தீர்வு அளிக்கமுடியும். இதுபோல, நிறைய அவ்வப்போது, கேட்டும் கடந்தும் வந்திருப்போம்.
கேட்கும்போது, மிகவும் ஆர்வமாகக்கேட்டுக்கொண்டு, மறுநாள் பார்த்தால், அதே பரபரப்பு, அதே லேட், அதே கெஞ்சல், ஏன் இந்த நிலை? காலையில் எழுவது என்ன அத்தனை கடினமா? ஏன் எழ முடியவில்லை, அதிகாலையில்?
நேரந்தவறாமை என்பது, நாம் பேணிக்காக்க வேண்டிய பெருஞ்செல்வங்களுள் ஒன்று என்பதை மறந்து போனோம், பெரும்பாலான நிறுவனங்கள், ஊழியர்களின் நேரந்தவறாமையை, உயரிய குணங்களாகப் பார்க்கின்றன, அவர்கள் நேரம் தவறுவதை, கடுமையாக எடுத்துக்கொள்கின்றன.
நம் முன்னோர்களும் நேரத்தின் அவசியத்தை உணர்த்தி, பல வகைகளில் நமக்கு அறிவுறுத்தி இருக்கிறார்கள், ஆயினும் நம்மால் கடைபிடிக்கமுடியவில்லை, விளைவு? பலவித பாதிப்புகள் நோய்கள்.
வீட்டில் எல்லா வேலைகளையும் செய்யும் குடும்பத்தலைவி அல்லது தலைவர் ஆனாலும், வீட்டு வேலைகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும், அதிகாலையில் துயில் எழுவது, சிறப்பாகும். இதனால் பலவித அற்புதங்கள் உங்கள் உடலுக்கு நிகழ்கின்றன. அதுபற்றி கீழே உள்ள வீடியோவில் பார்க்கலாம்