jaffna7news

no 1 tamil news site

Article

ஆடியில் எந்த ராசியில் பிறந்தவர்களுக்கு பணம் கொட்டப்போகுது தெரியுமா? திடீர் லட்சாதிபதியாகும் ராசி எது?

ஆடி மாதம் ஜூலை 17ஆம் தேதி பிறக்கிறது.

ஆகஸ்ட் 16ஆம் தேதி வரைக்கும் ஆடி மாதம் உள்ளது.

இந்த மாதத்தில் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

ஆடியில் எந்த ராசியில் பிறந்தவர்களுக்கு பணம் கொட்டப்போகுது தெரியுமா? திடீர் லட்சாதிபதியாகும் ராசி எது? | Aadi
துலாம்

வியாபாரம் முன்னேற்றமாக நடக்கும். நடைபாதை வியாபாரிகளுக்கு இது யோகமான காலகட்டம். ஏற்றுமதி இறக்குமதி தொழில் கணிசமான லாபத்தைக் கொண்டு வரும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் நல்ல லாபத்தைக் கொடுக்கும்.

விருச்சிகம்

சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தோடு பணிபுரிவார்கள். சிலருக்கு பதவி உயர்வோ புதிய பொறுப்போ கிடைக்கலாம். கமிஷன் வியாபாரங்களில் கணிசமான லாபம் பார்ப்பீர்கள். பொருட்களை வாங்கி வைத்து விற்பதன் மூலம் பெரும் பணம் கிடைக்கும்.
தனுசு

எதிர்பார்த்த வங்கி லோன் தடையில்லாமல் வந்து சேரும். முடங்கிக் கிடந்த காரியங்கள் வேகமெடுக்கும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்களை மகிழ்ச்சிப்படுத்த ஆடம்பரமாகச் செலவு செய்வீர்கள். தொட்ட காரியம் துலங்கும்.
மகரம்

வேலை பார்த்த இடத்தில் சுமத்தப்பட்ட வீண் பழி அகலும். தொழிலை விரிவாக்கம் செய்ய பெருமுயற்சி எடுத்துக் கொள்வீர்கள். உங்கள் பேச்சுக்கு மரியாதை கிடைக்கும். காண்ட்ராக்ட் தொழில் மூலம் கணிசமான லாபம் பார்ப்பீர்கள். கடந்த காலங்களில் இருந்த மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். ஆஞ்சநேயர் பெருமானை வழிபடுங்கள்.
கும்பம்

பணவரவு அதிகரித்து பழைய கடன்களை அடைக்கும் சூழ்நிலை உருவாகும். தொழில் வியாபாரம் நல்ல நிலைக்கு உயரும். வீடு வாகனம் வாங்கும் யோகம் சித்திக்கும். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரரை வழிபடுங்கள்.
மீனம்

வாகனங்களில் செல்லும்போது கவனச்சிதறல் ஏற்படக்கூடாது. கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும். கைத்தொலைபேசியை காதில் ஒட்ட வைத்துக் கொள்ளாதீர்கள். விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் அவமானம், தலைகுனிவு ஏற்படலாம். திருமோகூர் காளமேகப் பெருமாளை வழிபடுங்கள். கவலைகள் விலகி ஓடும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares