இந்தியாவில் திருமணமான புதுமணத்தம்பதி செல்பி எடுக்கும் போது ஏரியில் மூழ்கியதில் புதுமாப்பிள்ளை உயிரிழந்துள்ளார். கேரளாவை சேர்ந்த ரெகிலால் என்ற இளைஞனுக்கும், இளம்பெண்ணுக்கும் கடந்த 14ஆம் திகதி திருமணம் நடந்தது.
இந்நிலையில் புதுமணத்தம்பதிகள் நேற்று கோழிக்கோட்டின் குட்டியடி பகுதி அருகே உள்ள ஏரிக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஏரிக்கு முன்னால் நின்று செல்பி புகைப்படங்கள் எடுத்து கொண்டிருந்த போது திடீரென தண்ணீருக்குள் தவறி விழுந்தனர்.
மிக ஆழமான நீர் நிலை இருவரும் மூழ்கினர், அவர்களின் சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து காப்பாற்ற முயன்றனர். ஆனால் துரதிஷ்டவசமாக புதுமாப்பிள்ளை ரெகிலாலை காப்பாற்ற முடியவில்லை.
அவரின் மனைவி மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ரெகிலாலின் சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், திருமணத்திற்குப் பிந்தைய போட்டோ ஷூட் நிகழ்ச்சியின் போது இந்த துயர சம்பவம் நடந்ததா என்பதை நாங்கள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
இதை ஆய்வு செய்த பிறகே தீர்மானிக்க முடியும். புதுப்பெண் ஏரியில் இருந்து மீட்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் என கூறியுள்ளார்.