வெந்தையம் இப்படி பயன்படுத்தி பாருங்கள் சர்க்கரையில் மாற்றம் வரும்
இன்றைய திகதியில் உலக அளவில் மில்லியன் கணக்கிலான சர்க்கரை நோயாளிகள் ஆண்டுதோறும் புதிதாக உருவாகிறார்கள் என அண்மைய ஆய்வு தெரிவிக்கிறது. இந்நிலையில் சர்க்கரை நோயாளிகளில் வகை 1, வகை 2, ஜெஸ்டேஷனல் டயபட்டிஸ் ஆகிய மூன்று வகையான நோயாளிகளை பற்றி அறிந்திருப்போம். ஆனால் தற்போது ப்ரிட்டில் டயாபட்டீஸ் என்ற சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
ப்ரிட்டில் டயாபட்டீஸ் என்பது புதிய வகை சர்க்கரை நோய் அல்ல என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். டைப் 1 சர்க்கரை நோயாளிகளில் ஆயிரத்தில் மூவருக்கு இந்த வகையான பாதிப்பு ஏற்படுகிறது என மருத்துவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். இவர்களுக்கு ரத்த சர்க்கரையின் அளவு குறிப்பிட்ட கால அவகாசத்தில் அதிக அளவு வித்தியாசத்துடன் இருக்கும்.
அதாவது கணக்கிடும்போது இந்த வகையான நோயாளிகளுக்கு 280, 290 என்ற அளவை காட்டும். சில மணித்துளிகளில் அவர்களது ரத்த சர்க்கரையின் அளவு இயல்பான அளவைவிட மிகவும் கீழான எண்ணிக்கையில் இருக்கும்.
இதுபோன்ற திடீரென விரைவான சமச்சீரற்ற நிலையில் ரத்த சர்க்கரையின் அளவு இருப்பதைத்தான் ப்ரிட்டில் டயாபட்டீஸ் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆண்களைவிட பெண்களை அதிக அளவில் தாக்கும் இந்த வகையான சர்க்கரை நோயை மருத்துவர்கள் Labile Diabetes என்றும் குறிப்பிடுவார்கள்.