பிக்பாஸ் சீசன் 6ல் அதிரடியாக களமிறங்கும் மூன்று பிரபலங்கள்! யார் யார்னு தெரியுமா?
பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த விபரம் தற்போது வெளியாகி வருகின்றது.
பிக்பாஸ் நிகழ்ச்சி

பிரபல ரிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதை ரசிக்க ஒரு கூட்டம் உள்ளது என்றால், கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதை பார்ப்பதற்கும் பல ரசிகர்கள் உள்ளனர்.
வெற்றிகரமாக தமிழில் 5 சீசன்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி, விரைவில் சீசன் 6 ஆரம்பமாக உள்ளது, இந்நிலையில் இதில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் விவரங்கள் அவ்வப்போது வெளியாக துவங்கியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6ல் அதிரடியாக களமிறங்கும் மூன்று பிரபலங்கள்! யார் யார்னு தெரியுமா? | Bigg Boss Season6 New
ஆறாவது சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள்

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் ரக்சன் மற்றும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொள்வதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது.

இவர்களை தொடர்ந்து இந்த பட்டியலில் தற்போது இரண்டு நடிகர்கள் மற்றும் ஒரு மாடல் என மூன்று முக்கிய பிரபலங்களின் பெயர் அடிபட்டு வருகிறது. நடிகர் கார்த்தி குமார், நடிகர் அஜ்மல் மற்றும் மொடல் அஜய் மெல்வின் ஆகியோர் கலந்து கொள்வதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
