உப்பு மூலம் செல்வத்தை ஈர்க்கும் ரகசியம் தெரியுமா ?
இந்த ரகசியம் உங்களுக்கு தெரிந்தால் நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் உங்கள் வீடு தேடி வரும்.
உலகில் அனைத்திலும் நன்மை, தீமை கலந்தே இருக்கின்றன. நாம் எவ்வளவு தான் நல்லவர்களாக வாழ்ந்தாலும் சில தீமைகள் நம்மை பாதிக்கவே செய்கின்றன.
கண்களால் காண முடியாத துர்சக்திகளை அழித்து, நமக்கு நன்மையை அளிக்கும் சக்தி நாம் உணவிற்கு பயன்படுத்தும் “உப்பு” பெற்றிருக்கிறது.
இந்த உப்பை கொண்டு நமக்கு செய்துகொள்ள கூடிய சில நன்மை அளிக்கும் பரிகாரங்களை அறிந்து கொள்ளலாம்.
உப்பு பரிகாரம்
ஒரு சிறு கிண்ணத்தில் நிறைய சமையலுக்கு பயன்படுத்தும் உப்பை போட்டு நிரப்பி, உங்கள் வீட்டு குளியலறையில் நீர் படாத ஒரு மூலையில் வைக்க வேண்டும்.
உப்பு கரைய, கரைய மீண்டும் உப்பை நிறைத்து கொண்டு வர வேண்டும். இவ்வாறு செய்வதால் அந்த வீட்டில் இருப்பவர்களை அண்டியிருக்கும் தரித்திரம் நீங்கும்.
கழிவறை, குளியலறை சேர்த்து கட்டப்பட்ட வீடுகளில் வசிப்பவர்கள், அந்த அறையின் குளிக்கும் இடம் பகுதியில் தண்ணீர் படாத இடத்தில் இந்த உப்பு கிண்ணத்தை வைக்க வேண்டும்.
வாரத்தில் ஒரு நாள் வீடுகளை கழுவி சுத்தப்படுத்தும் போது, தண்ணீரில் சிறிது கல்லுப்பை சேர்த்து கரைத்து வீட்டை சுத்தப்படுத்தி வந்தால்.
வீட்டில் நிறைந்திருக்கும் எதிர்மறை சக்திகள் நீங்கி வீட்டில் நன்மைகள் பெருக தொடங்கும்.
உங்கள் பணம் வைக்கும் பர்ஸ், பண பை போன்றவற்றில் சில கல்லுப்பு தூள்களை போட்டு வைப்பதால் செல்வத்தை அதிகம் ஈர்க்கும்.
கணவன் மனைவிக்கிடையே கருத்துவேறுபாடுகள், மனவருத்தங்கள் ஏற்பட்டிருக்கும் போது, ஒரு கிண்ணத்தில் கல்லுப்பை நிறைத்து, தம்பதிகள் உறங்கும் படுக்கை அறையின் ஒரு ஓரத்தில் வைப்பதால் கணவன் மனைவிக்கிடையே இருக்கும் பிரச்சனை கூடிய விரைவில் தீர்ந்து ஒற்றுமையாக வாழ்வார்கள்.
நீங்கள் பயன்படுத்தும் வாகனங்களை கழுவும் போது, தண்ணீரில் சிறிது கல்லுப்பை போட்டு கரைத்து, அந்நீரைக் கொண்டு உங்களின் வானங்களை சுத்தப்படுத்துதினால், அதில் நிறைந்திருக்கும் எதிர்மறை சக்திகள் நீங்கும்.
அடிக்கடி வாகனங்கள் பழுதடைவது குறையும். எதிர்பாரா விபத்துகள் ஏற்படாமல் காக்கும். வாரம் ஒருமுறையாவது குளிக்கும் நீரில் கல்லுப்பை போட்டு கரைத்து குளித்து வந்தால் உங்கள் உடல் மற்றும் மனதில் நிறைந்திருக்கும் எதிர்மறை அதிர்வுகள் நீங்கும்.