Article

மயானத்தில் இருந்து கேட்ட பெண்ணின் அழுகுரல் : கிராம மக்கள் அருகே சென்ற போது கண்ட அதிர்ச்சிக் காட்சி!!

பீகாரில்..

இந்தியாவில் சிறுமி உயிரோடு தனது தாயாரால் புதைக்கப்பட்ட நிலையில் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள கிராமம் ஒன்றில் உள்ள மயானம் அருகே சில பெண்கள் விறகுகளை எடுத்து கொண்டிருந்தனர். அப்போது மயானத்தில் இருந்து பெண் அழும் குரல் கேட்டது.

இதையடுத்து பேய் தான் அழுகிறது என பயந்து பதறிய பெண்கள் அங்கிருந்து ஓடி சென்றனர். பின்னர் ஊர் மக்கள் பலர் சேர்ந்து சுடுகாட்டுக்குள் சத்தம் வந்த திசையை சென்று பார்த்துள்ளனர். அப்போது களிமண்ணில் இருந்து சத்தம் கேட்கவும், பதறி போய் தோண்டவும் ஆரம்பித்தனர்.

அங்கு சிறுமி உயிருடன் புதைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்த சிறுமியின் வாயில் களிமண்ணை அடைத்து வைத்திருந்ததும் தெரிந்தது. மீட்கப்பட்ட சிறுமி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை தரப்பட்டது.

பின்னர் சிறுமி மருத்துவர்கள், பொலிசார் முன்னிலையில் பேசுகையில், என்னுடைய பெயர் லாலி. என் பெற்றோரின் பெயர் ராஜு சர்மா – ரேகா ஷர்மா. என் கிராமத்தின் பெயர் தெரியவில்லை.

என் அம்மாவும், பாட்டியும் என்னை கல்லறைக்கு அழைத்து வந்தனர். நான் அழுது கொண்டே இருந்தேன்.. அதனால், என் வாயில் களிமண்ணை திணித்தனர். பிறகு குழிதோண்டி என்னை புதைத்தனர் என்று கூறி அனைவரையும் அதிர வைத்தார். இதையடுத்து லாலியின் பெற்றோர் மற்றும் கிராமத்தை அடையாளம் காணும் முயற்சியில் பொலிசார் இறங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares