கிராமத்து கோவில் விழா ஒன்றில் வெறும் வாயை வைத்து நாதஸ்வரம் இசையை இசைத்து அசத்திய சிறுவனின் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது செம வைரலாக இணையத்தில் பரவி வருகிறது.
நாதசுவரம் (Nadaswaram) என்பது துளைக்கருவி வகையைச் சேர்ந்த ஓர் இசைக்கருவியாகும். இது நாதசுவரம், நாதசுரம், நாகசுரம், நாகஸ்வரம். நாயனம் என்று பலவாறு அழைக்கப்படுவது உண்டு.
சிறப்பாகத் தென்னிந்தியா, இலங்கை போன்ற இடங்களிலும், தென்னிந்திய இனத்தவர் வாழும் உலகின் பிற பகுதிகளிலும் இந்த இசைக்கருவி வழக்கில் உள்ளது. திறந்த இடத்தில் இசைப்பதற்கு ஏற்றது. வெகு தூரத்தில் இருந்து கேட்டாலும் இன்பத்தைத் தரும் இயல்பினைக் கொண்டது.
தென்னிந்தியாவில் இது ஒரு மங்கலமான இசைக்கருவியாகக் கருதப்படுவதனால், பொதுவாக எல்லாவகையான நன் நிகழ்வுகளிலும் இதற்கு ஒரு இடம் உண்டு. வசதியான பெரிய கோயில்களில் அன்றாடம் இது பல தடவைகள் இசைக்கப்படுவது வழக்கம்.
ஏனையவற்றில் சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகளின் போது பயன்படுகின்றது. தவிரவும், தனிப்பட்டவர்களின் திருமணம், பூப்புனித நீராட்டுப் போன்ற நிகழ்ச்சிகளிலும், சமய சார்பற்ற பல பொது நிகழ்வுகளிலும் நாகசுவரம் சிறப்பிடம் பெறுகின்றது.
இவ்வாத்தியம் முன்பு தென்னிந்தியாவிலுள்ள நாகூர், நாகபட்டிணம் முதலிய ஊர்களில் உள்ளவர்களான, நாகசர்பத்தைத் தெய்வமாகப் பூசித்த நாகர் என்ற சாதியரினால் வாசிக்கப்பட்டு வந்தது. நாகத்தின் போன்று உருவத்தைப் போன்று நீண்டிருந்ததின் காரணமாகவும் நாதசுவரம் என்னும் ஏற்பட்டது.
இதனுடைய இனிமையான நாதம் காரணமாக பிற்காலத்தில் இது நாதஸ்வரம் எனப்பட்டது. பல்லாண்டுகளாக திமிரி என்னும் நாகசுவரமே வாசிக்கப்பட்டது. இதன் நீளம் குறைவாக இருக்கும்.
இதில் சில மாற்றங்களோடு நாகசுவர மேதை டி. என். ராஜரத்தினம் பிள்ளை அறிமுகப்படுத்தியதுதான் தற்போது புழக்கத்தில் உள்ள பாரி நாகசுவரம் ஆகும்.
திமிரி நாகசுவரத்தைவிட பாரி நாகசுவரம் நீளமாக இருப்பதுடன், இசைக் கலைஞர்களால் நீண்ட நேரம் வாசிக்க சுருதி அளவுடன் இருப்பது இதன் தனிச்சிறப்பாகும்.
இப்படி சிறப்பு பெற்ற இசையை கருவி ஏதும் இல்லாமல் இசைத்து அசத்திய சிறுவனை ஒட்டுமொத்த இணைய உலகமும் பாராட்டி வருகிறது. அந்த வீடியோ உங்களுக்காக இங்கே.