கோவிலுக்கு சென்று வரும் போது செய்யக்கூடாத 5 தவறுகள்

கோவிலுக்கு சென்று வரும்போது சில காரியங்களை செய்யக்கூடாது என்று சொல்வது ஏன் தெரியுமா? முன்பெல்லாம் ஒரு கோவிலுக்கு போகவேண்டுமென்றால், அங்குள்ள தெப்ப குளத்தில் குளித்துவிட்டு கோவிலுக்குள் போனார்கள். அது எதற்காக என்றால் உடலை குளிர்விப்பதற்காகத்தான் அவ்வாறு செய்தார்கள்.

எதற்காக உடலை குளிர்வித்தார்கள் என்றால், பொதுவாக நம் உடலை சுற்றியும் நல்ல அணுக்கள், தீய அணுக்கள் இருக்கும். அதே போல நேர்மறை எதிர்மறை ஆற்றல்களும் நிறைந்திருக்கும். அது நமது உடல் எங்கும் பரவியுள்ள காரணத்தினால் கோவிலுக்குள் நாம் செல்வதினால் அங்குள்ள நேர்மறை ஆற்றல் முழுவதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவ்வாறு செய்தனர்.

இப்போதெல்லாம் குளிப்பதற்கு பதிலாக, எல்லா கோவில்களுக்கும் முன் தண்ணீர் குழாய் வைத்துள்ளனர். குறைந்தபட்சம் தலையில் தண்ணீர் தெளித்து கொண்டு அல்லது நமது காலையாவது கழுவிக்கொண்டு கோவிலினுள் செல்லவேண்டும் என்பதற்காகதான்.

கோவிலுக்கு சென்று வரும்போது நேராக வீட்டிற்குத்தான் போகவேண்டும். ஏனெனில் நாம் வெறும் காலோடு கோவிலை சுற்றிவரும்போது அங்குள்ள நேர்மறை ஆற்றல்களால் நமக்குள் உட்கிரகிக்கப்படும். மேலும் இவை வீட்டில் பரவும். இதனால்தான் நேராக வீட்டிற்கு செல்லவேண்டும் என்றும், வீட்டிற்கு சென்றவுடன் உடனடியாக கால்களை கழுவ வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

சிலர் கோவிலுக்கு சென்று வந்ததும் குளிக்கவும் செய்வார்கள். இது மிகப்பெரிய தவறாகும். அது நாம் பெற்ற வாரத்தை இழப்பதற்கு சமமாகும். கோவிலுக்குள் நுழையும்போது எப்போதும் தலைவாசல் வழியாக நுழைவதுதான் சிறப்பானது. அதேபோல வெளியே செல்லும்போது புறமுதுகை காட்டி செல்லக் கூடாது.

சாமிக்கு சமர்பிக்கப்பட்ட மாலை பிரசாதமாக வாங்கிக் கொள்ளலாமே தவிர அவற்றை கழுத்தில் அணிந்துக் கொள்ளக் கூடாது. கோவிலில் பிரசாதமாக கொடுத்த பூக்களை நமது பூஜை அறையில் சாற்றவோ அல்லது வைக்கவோ கூடாது. மேலும் கோவிலில் பிரசாதமாக கொடுக்கும் விபூதி, குங்குமம், சந்தனம் போன்றவற்றையும் வீணடிக்கக் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *