வலையில் சிக்கிய ராட்தச டிராகன்! அதிர்ந்து போன மீனவர்…. ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட பகீர் தகவல்..!

நோர்வே கடலில் வித்தியாசமான ராட்தச டிராகன் மீன் ஒன்றை ரஷ்யாவை சேர்ந்த மீனவர் ஒருவர் பிடித்திருக்கிறார்.

ரஷ்யாவில் பிறந்து வளர்ந்தவரான ரோமன் ஃபெடோர்சோவ் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நோர்வே கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்றிருக்கிறார்.

வலை வீசிய ரோமன் சிறிது நேர காத்திருப்பிற்கு பிறகு வலையை படகிற்குள் இழுத்த போது அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

உள்ளே இருந்த வித்தியாசமான உயிரினத்தை வெளியே எடுத்திருக்கிறார்.
வித்தியாசமான உயிரினம்

பெரிய கண்கள், வால், பிங்க் நிற உடல் அமைப்பு என டிராகன் போலவே எந்த உயிரினம் இந்திருக்கிறது.

இதனை அடுத்து அந்த மீனை புகைப்படம் எடுத்த ரோமன் அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

குறித்த உயிரினம் சிமேரா என்னும் அரியவகை மீன் என்பது தற்போது தெரியவந்திருக்கிறது.
வியப்பில் ஆராச்சியாளர்கள்

இதனை ghost sharks என்றும் அழைக்கிறார்கள். பொதுவாக கடலின் அடியாழத்தில் வசிக்கும் இந்த மீன்கள் சுமார் 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் தோன்றியதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ரோமன் தனது வித்தியாசமான மீனின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்துள்ளார். குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

Shares