jaffna7news

no 1 tamil news site

Astroyogi

6,15,24 இந்த திகதியில் பிறந்தவர்களாக இருந்தால், நீங்கள் இப்படித்தான் இருப்பீர்களாம். நீங்களும் இப்படியா..?

6,15,24 இந்த திகதியில் பிறந்தவர்களாக இருந்தால், நீங்கள் இப்படித்தான் இருப்பீர்களாம்.
நீங்களும் இப்படியா..?

ஓவ்வொரு எண்ணுக்கும் ஒரு தனித்தன்மை இருப்பது போல 6 ம் எண்ணிற்கு உண்டு.

6,15,24 ஆகிய எண்களில் பிறந்தவர்கள் 6ம் எண்ணின் ஆதிக்கத்திற்குரியவர்கள்.

6ம் எண்ணுக்குரிய கிரகம் சுக்கிரனாவார்.

6ம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் ஹி.க்ஷி.கீ ஆகியவைகள் ஆகும்.

அந்தவகையில் 6 ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும் அவர்களது குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும் என பார்ப்போம்.

குண நலன்கள்

நேர்மையே குறிக்கோளாகக் கொண்டவர்கள் 6ம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். பிறருக்கு உதவி செய்வதில் வல்லவர்கள்.

தன்னலம் கருதாமல் விட்டுக் கொடுப்பார்கள். மிகவும் பொறுமைசாலிகளாக இருந்தாலும் சில நேரங்களில் கோபம் கொள்வதும் உண்டு.

தற்பெருமைக்கும், புகழ்ச்சிக்கும் ஆசைப்படாதவர்கள் என்பதால் இவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுவதில்லை.

சாமர்த்திய சாலிகள்

எதிலும் சாதுர்யமாகப் பேசி பிறரை தம் வசப்படுத்திக் கொள்வார்கள்.ஆனால், சில நேரங்களில் மற்றவரின் மனதை புண்படுத்தக்கூடிய அளவிற்கு ஒரு சொல் என்றாலும் மறக்க முடியாத அளவிற்கு பேசி விடுவார்கள்.

கேலியும், கிண்டலும் நையாண்டித் தனமும் அதிகம் இருக்கும். குதர்க்கமாகவும், பரிகாசமாகவும் பேசி எதிரிகளை அவமானப்படுத்தி விடுவதில் சாமர்த்திய சாலிகள்.

மிகவும் பொறுமைசாலிகள். ஆதலால் அதிக சகிப்பு தன்மையும் உண்டு. சிந்தனா சக்தியிலும், செயலாற்றுவதிலும் நிதானமாக செயல்பட்டாலும் தன்னம்பிக்கையும் அசட்டு தைரியமும் மேலோங்கி இருக்கும்.

பிடிவாத குணம் படைத்தவர்கள்

பிடிவாத குணம் படைத்த இவர்கள் பிறருக்கு அடிபணிவதென்பது இயலாத காரியம். இவரிடம் எவ்வளவு குறைகள் இருந்தாலும் அதை மறைத்து மற்றவர்களின் குறைகளை அம்பலமாக்கி விடுவார்கள்.

தனக்கு நெருங்கியவர்கள் நெறி தவறும் போது இவருடைய மனநிலை இவரின் கண்களில் தெரியும். நீதியை நிலை நாட்ட வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர்கள்.

எந்த காரியத்திலும் லாப நஷ்டத்தை ஆராய்ந்து பார்த்த பின்தான் செயலில் இறங்குவார்கள்.

தனக்கு மிஞ்சியதைத்தான் பிறருக்கு தானமாக கொடுப்பார்கள். சமூக நல்லப்பணிகளிலும் ஆர்வம் இருக்கும்.

உடலமைப்பு

ஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் பெரும்பாலும் குள்ளமானவர்களாக இருப்பார்கள். உடல் குண்டாக இருக்கும்.

கருணை நிறைந்த கண்ஙகளைக் கொண்டிருப்பார்கள். எப்பொழுதும் தம்மை அழகாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் உடையவர்கள்.

ஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் சுக்கிரன் ஆதிக்கம் பெற்றவர்கள் என்பதால் குளிர்ச்சியான உடலை பெற்றிருப்பார்கள்

நோய்கள்

இவர்களுக்கு காய்ச்சல், சளி போன்ற நோய்களும், இருதய சம்பந்தமான வியாதிகளும், சுவாசம் சம்பந்தமான நோய்களும் உண்டாகும்.

சர்க்கரை நோய் அதிகம் பேருக்கு ஏற்படும். மர்ம பிரதேசங்களில் நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு.

குடும்ப வாழ்க்கை

ஆறாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு குடும்ப வாழ்க்கை திருப்தியளிப்பதாகவே அமையும்.

பெரும்பாலானவர்கள் காதல் விஷயங்களில் வெற்றி பெற்று தன் மனதிற்கு பிடித்தவரையே வாழ்க்கை துணையாக அடைவர்.

குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். தெய்வ காரியங்களில் ஈடுபாடு உடையவர்களாக இருப்பார்கள்.

பொருளாதாரம்

ஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் ஆடை, ஆபரணங்களுக்காகவும், ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காகவும் நிறைய செலவு செய்வார்கள்.

சிலர் பிறவியிலேயே செல்வந்தராக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நடுத்தர வர்க்கம் என்றால் பொருளாதார நிலை பற்றாக்குறையாகவே இருக்கும்.

எப்பாடுபட்டாவது தம்முடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய அளவிற்கு சம்பாதிக்கக்கூடிய ஆற்றல் இருக்கும்.

இவர்களது நண்பர்கள், பகைவர்கள்
ஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் புதிதாக பழகுவதற்கு சற்று சங்கோஷப்படுபவர்களாக இருந்தாலும், பழகிய பின் இனிமையானவர்களாக இருப்பார்கள்.

தனக்கு பிடிக்காதவர்களை சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதுபோல ஓட ஓட விரட்டுவார்கள்.

4,5,7,8 ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களுடன் நட்புடன் பழக முடியும். 1,2 ம் எண்ணில் பிறந்தவர்களிடமிருந்து சற்று விலகி இருப்பதே நல்லது

தொழில்

ஆறாம் எண்ணிற்குரியவர் சுக்கிரனின் ஆதிக்கத்தை பெற்றவர்கள் என்பதால் கலைத்துறை சம்மந்தமானவற்றில் முன்னேற்றமடைவார்கள்.

சினிமா, சங்கீதம், இசை, நாட்டியம், நாடகம் போன்றவற்றில் பிரகாசம் உண்டாகும். அரசாங்க பணிகளில் உயர் பதவிகள் அமையும்.

ஓவியம் வரைதல், கவிதைகள், பாடல்கள் எழுதுதல் போன்றவற்றில் புகழும், கௌரவமும் கிடைக்கும்.

பெண்கள் உபயோகப்படுத்தக்கூடிய அழகு சாதனப் பொருட்கள், பெண்கள் அணியும் ஆடைகள், பெண்களுக்கான அலங்காரப் பொருட்கள் போன்றவற்றிலும் நல்ல லாபம் அமையும். வாசனை திரவியங்களை வியாபாரம் செய்வதால் நல்ல லாபம் கிடைக்கும்.

மேற்கு திசையும், தென் மேற்கு திசையும், சுக்கிரனுக்குரிய திசைகள் ஆகும். ஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் இந்த திசை நோக்கி பயணம் செய்தபின் புதிய சுபகாரிய முயற்சிகள் மேற்கொள்வது உத்தமம்

அதிர்ஷ்டம் தருபவை

அதிர்ஷ்ட திகதி – 6,15,24,9,18,27,
அதிர்ஷ்ட நிறம் – வெளிர்நீலம்
அதிர்ஷ்ட திசை- தெற்கு, அதிர்ஷ்ட கிழமை-வெள்ளி
அதிர்ஷ்ட கல்- வைரம்
அதிர்ஷ்ட தெய்வம் – ஸ்ரீலட்சுமி
பரிகாரம்: ஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் லஷ்மி தேவியை வழிபாடு செய்வது, லஷ்மி பூஜை செய்வது உத்தமம். வெள்ளிக்கிழமை தோறும் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares