அரவிந்த் சுவாமி நடிப்பில் வெளியான என் சுவாச காற்றே படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தியா மிர்ஸா. அதன்பிறகு பாலிவுட்டில் பல படங்களில் நாயகியாக நடித்த இவர், ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.
மேலும் பல்வேறு வெப் தொடர்களில் நடித்து தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். கடந்த வருடம், வைபவ் ரெக்கியை காதலித்து திருமணம் செய்துகொண்ட தியா மிர்ஸாவுக்கு தற்போது ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த தியா மிஸ்ரா திருமணத்திற்கு முன்பே பெண்கள் கர்ப்பம் ஆவது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதில், திருமணத்திற்கு முன்பு உறவு வைத்துக்கொள்வது இங்கு தவறாக பார்க்கப்படுகிறது. ஒரு ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு முன்பே பாலியல் ரீதியாக தொடர்பு வைத்துக்கொள்வது அவர்களது விருப்பம் இதைப்பற்றி முடிவு எடுக்க அவர்களுக்கு முழு உரிமையும் உண்டு.
அதே சமயம் அமெரிக்காவில் தற்போது நடைமுறைக்கு வந்துள்ள கருகலைப்பு சட்டம் குறித்து பேசிய அவர், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதகரித்து வரும் இந்த காலகட்டத்தில், பெண்கள் கருகலைப்பு கூட செய்ய முடியாத நிலை உள்ளது என்று கூறியுள்ளார். இவரின் இந்த பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.