ஓனர் மனைவியையும் லீசுக்கு எடுத்த நபர்… காரை ஏற்றி கொன்ற கணவன் : பதறவைக்கும் சம்பவம்!!

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியைச் சேர்ந்தவர் வினோத் விக்டர். இவர் வேளாங்கண்ணி மாதா கோயில் பகுதியில் தங்கும் விடுதி நடத்தி வருகிறார். இவரது மனைவி மரிய ரூபினா. வினோத் விக்டருக்கு கடந்த வருடம் வெளிநாட்டில் மாதம் 5 லட்சம் ரூபாய் சம்பளத்துக்கு வேலை கிடைத்துள்ளது. இதனால் தான் நடத்தி வரும் தங்கும் விடுதியை திமுக பிரமுகர் மதன் கார்த்திக் என்பவருக்கு விக்டர் லீசுக்கு விட்டுள்ளார்.

மதன் கார்த்தியை மனைவி மரிய ரூபினாதான் கணவருக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். இதன் பின்னர் விக்டர் வெளிநாட்டுக்கு சென்றுவிட, ரூபினாவை சந்திக்க அடிக்கடி மதன் கார்த்திக் வந்து சென்றுள்ளார்.இதனை கவனித்து வந்த விக்டரின் நெருக்கமானவர்கள் இதுகுறித்து அவரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் சலனம் அடைந்த விக்டர் மனைவிக்கு தெரியாமல் வீட்டில் ஒளித்து வைத்திருந்த கேமரா பதிவுகளை ஆய்வு செய்துள்ளார்.

அதில், மதன் கார்த்திக் அடிக்கடி மனைவியை பார்க்க வந்து செல்வதும், தனது மனைவியுடன் நெருக்கமாக இருப்பதும் தெரிய வந்தது. இதனால் ஆத்திரமடைந்த விக்டர் மதன் கார்த்திக்கிடம் இருந்து விடுதியை மீட்க வேளாங்கண்ணிக்கு வந்துள்ளார். அப்போது, விடுதியை தர மறுத்ததுடன் விக்டரை மதன் கார்த்திக் அடித்து தாக்கியுள்ளார். படுகாயங்களுடன் உயிர் பிழைத்த விக்டர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார்.

இந்த நிலையில், சம்பவத்தன்று விக்டரும் அவரது மனைவி ரூபினாவும் தங்களது விடுதிக்கு காரில் வந்துள்ளனர். அப்போது, அடியாட்களுடன் நின்றிருந்த மதன் கார்த்திக் விக்டரின் காரை சேதப்படுத்த முயற்சித்துள்ளனர். இதனால் பயந்துபோன கார் ஓட்டுநர் இறங்கி ஓடியுள்ளார். பின்னர் கார் சீட்டிற்கு மாறிய விக்டர் காரை வேறு திசையில் திருப்பி ஓட்டி சென்றுள்ளார்.

ஆனால், அந்த கும்பல் அவரை விடாமல் பைக்கில் துரத்தி சென்றுள்ளது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று விக்டரின் காரை மதன் கார்த்தியும் கூட்டாளியும் மடக்கியுள்ளனர்.அப்போது உயிரை காப்பாற்றிக்கொள்ள வந்த வேகத்தில் அவர்கள் மீது விக்டர் காரை ஏற்றி விட்டு தப்பியுள்ளார். இதில் படுகாயமடைந்த மதன் கார்த்தி சம்பவ இடத்திலேயே பலியாகிய நிலையில் கூட்டாளி மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Shares