நம்முடைய வீடுகளில் சர்வ சாதாரணமாக உலா வரும் பல்லிகள், நம்முடைய உடலில் எங்கே விழுகிறது. அது எந்த திசையில் சத்தமிடுகிறது என்பது வரை நம்முடைய முன்னோர்கள் சாஸ்திர, சம்பிரதாயத்தில் முக்கியத்துவத்தை பின்பற்றி வருகின்றனர்.
திடீரென்று உடம்பில் விழுந்து விட்டால், கெடுதல் நம்மை அண்டாமல் இருக்க உடனே குழித்து விட்டு பூஜை செய்வார்கள். சில இடங்களில் பல்லி சத்தமிட்டால் நல்லது நடக்கும், சில இடங்களில் சத்தமிட்டால் தீயவை நடக்கும் என்று கூறுவார்கள்.
பல்லி சத்தமிட்டால் என்ன பலன்?
ஜோதிடத்தின் பார்வையில், பல்லி எழுப்பக் கூடிய சப்தம் வைத்து பார்க்கலாம். வாயு மூலையான வடக்கு திசையிலிருந்து பல்லி சத்தமிட்டால் நல்லது நடக்கும். அதாவது உங்கள் வீட்டில் சுப செய்திகள் தேடிவரும் என்று அர்த்தம்.
அதுவே, வீட்டின் கிழக்கு திசையிலிருந்து பல்லி சத்தமிட்டால் நல்லது அல்ல. அதனால் நம் மனதில் பயம் மற்றும் கெட்ட செய்தி வரக்கூடும் என்ற அச்சம் வருமாம்.
பல்லி தலையில் விழுந்தால்
பல்லி தலையில் விழுவது கெட்ட சகுணத்தின் ஆரம்பம் ஆகும். தலையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம் உண்டாகும். சில நேரம் உறவினரோ அல்லது தெரிந்தவரோ மரணம் கூட ஏற்படலாம்.
தலையின் வலது பக்கம் பல்லி விழுந்தால் கலகம் உண்டாகும். அதேபோன்று, நெற்றியின் இடது பக்கம் பல்லி விழுந்தால் கீர்த்தி, வலது பக்கம் பல்லி விழுந்தால் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும் என்று சொல்வார்கள்.
புருவத்தில் பல்லி விழுந்தால்
கண்கள் அல்லது கண்ணங்களின் மீது பல்லி விழுந்தால், ஏதேனும் ஒரு காரணத்திற்காக நீங்கள் தண்டிக்கப்படக் கூடும் என்பது அர்த்தம்.
அதுவே, புருவத்தில் பல்லி விழுந்தால், ராஜ பதவி எனும் உயர்பதவியில் உள்ளவர்களிடமிருந்து உதவி கிடைக்கும்.
மணிக்கட்டில் பல்லி விழுந்தால் பலன்
இடது மணிக்கட்டில் பல்லி விழுந்தால் கீர்த்தி வலது மணிக்கட்டில் பல்லி விழுந்தால் பீடை என்று சொல்வார்கள் நம்முடைய முன்னோர்கள்.
கணுக்காலின் இடது பக்கம் பல்லி விழுந்தால் வெளியூர் செல்லும் யோகம் பிறக்கும். கணுக்காலின் வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு உண்டாகுமாம்.
பல்லி நெற்றி விழுந்தால்
நெற்றி மீது பல்லி விழுவது நல்ல சகுணமாக பார்க்கப்படுகின்றது. நெற்றியின் இடது பக்கம் பல்லி விழுந்தால் கீர்த்தி உண்டாகும். நெற்றியின் வலது பக்கம் பல்லி விழுந்தால் லக்ஷ்மிகரம் உண்டாகும்.
வயிறு பகுதியில் பல்லி விழுந்தால் வயிற்றின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி உண்டாகும். வயிற்றின் வலது பக்கம் பல்லி விழுந்தால் தானியம் சேரும்.
பல்லி முதுகில் விழுந்தால்
முதுகு இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை உண்டாகும். முதுகு வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம் ஏற்படும்.தோள் இடது பக்கம் பல்லி விழுந்தால் போகம் உண்டாகும். வலது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி உண்டாகும்.
தொடை பகுதியில் விழுந்தால்
தொடை இடது பக்கம் பல்லி விழுந்தால் சஞ்சலம் உண்டாகும். வலது பக்கம் பல்லி விழுந்தால் துக்கம் உண்டாகும். பிருஷ்டத்தின் இடது பக்கம் பல்லி விழுந்தால் செல்வம் உண்டாகுமாம்.
நம் உடலின் எந்த பாகத்தின் மீதும் பல்லி விழுந்தாலும் அச்சம் தேவையில்லை, உடனே குளித்து விட்டு, அருகில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்று எந்த கெட்ட செயலும் நடந்துவிடக் கூடாது என்று வழிபடுங்கள்.
இதனால், வருங்காலத்தில் பல்லி விழுந்ததால் ஏற்படக் கூடிய பாதிப்பும் உங்களை விட்டு விலகும்.