சர்க்கரை நோயை அலறவிடும் சிவப்பரிசி ஆப்பம்! இனி சுடச் சுட சுவையாக செய்து அசத்துங்கள்
சிவப்பு அரிசி உடலுக்கு வலிமை தரும்.
நார்ச்சத்து, பி.காம்ப்ளக்ஸ் இந்த உணவில் அதிகளவு இருக்கிறது. பொதுவாக சர்க்கரை நோயாளிகள் அரிசி உணவை சாப்பிடவே கூடாது என்று சொல்வார்கள்.

ஆனால் சர்க்கரை நோயாளிகள் சிவப்பு அரிசியை எடுத்துகொள்ளலாம்.
சர்க்கரை நோயை அலறவிடும் சிவப்பரிசி ஆப்பம்! இனி சுடச் சுட சுவையாக செய்து அசத்துங்கள் | How To Make Red Rice Appam Diabetes
இது உடலில் இருக்கும் நொதிகளுடன் இணைந்து செயலாற்றுகிறது. அதில் ஒன்று குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் சுரப்பு.
இதில் இருக்கும் மெக்னீசியம் ஆனது இன்சுலின் சுரப்புக்கு உதவுகிறது. சிவப்பு அரிசி சாப்பிடுபவர்களுக்கு டைப் 2 நீரிழிவு அபாயத்தை குறைக்க செய்கிறது.

சர்க்கரை நோயை அலறவிடும் சிவப்பரிசி ஆப்பம்! இனி சுடச் சுட சுவையாக செய்து அசத்துங்கள் | How To Make Red Rice Appam Diabetes
இதிலிருக்கும் குறைந்த கிளைசெமின் குறியீடு சர்க்கரை அளவை கட்டுப்படுத்த செய்வதால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை செய்யகூடியது.
இன்று இந்த அரிசியில் ஆப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சிவப்பு அரிசி - அரை கிலோ
தேங்காய் - 1
தேங்காய் துருவல் - 2 கப்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
வெல்லம் - சிறிய துண்டு
தண்ணீர், உப்பு - சிறிதளவு
செய்முறை
சிவப்பு அரிசியை நன்றாக கழுவி 4 மணி நேரம் ஊறவைத்து அதனுடன் தேங்காய் துருவல், வெல்லம், வெந்தயம் சேர்த்து கிரைண்டரில் நைசாக அரைத்து கொள்ளவும். அரைத்த மாவை சிறிது உப்பு சேர்த்து கலந்து புளிக்க விடவும்.

தேங்காயை துருவி பால் எடுத்து கொள்ளவும்.
சர்க்கரை நோயை அலறவிடும் சிவப்பரிசி ஆப்பம்! இனி சுடச் சுட சுவையாக செய்து அசத்துங்கள் | How To Make Red Rice Appam Diabetes
ஆப்ப சட்டியை அடுப்பில் வைத்து மாவை ஊற்றி சட்டியை கையால் பிடித்து மாவை சுற்றி பரவ விட்டு மூடி வைக்கவும். ஒரு நிமிடம் கழித்து திறந்தால் சுவையான ஆப்பம் ரெடி.
சுவையான சத்தான இந்த ஆப்பத்தை தேங்காய் பாலுடன் பரிமாறவும். தேங்காய் பால் பிடிக்காதவர்கள், குருமா, பாயா வைத்து சுவைக்கலாம்.
