அட இது தெரியாம பேச்சு
இதை செய்தால் ஜென்மத்தில் எலிகள் வீட்டின் அருகில் கூட வராது
நமது வீட்டில் எலியின் தொல்லை கொஞ்சநஞ்சம் கிடையாது. எலிகள் நம்ம வீட்ல வந்து துணிகள், புத்தகம், நாற்காலி, தானியங்கள் ஆகியவற்றை நாசம் செய்கிறது. இதனால் தான் எலியை சத்துரு என்று சொல்வார்கள். குழந்தைகளுக்கு பிளேக் நோய் வருவதற்கு எலி தான் முக்கிய காரணம். நமது வீட்டில் எலிகள் இருந்தால் ஆரோக்கியம் ரொம்ப தூரமா இருக்குன்னு மருத்துவர்கள் சொல்வார்கள். நம்ம வீட்ல எலிகள் வராமல் இருக்க என்ன செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம்.
மிளகு பொடி: மிளகு பொடி வாசனை எலிக்கு சுத்தமாக பிடிக்காது. மிளகைப் பொடியாக்கி எலிகள் வரும் இடத்தில் தூவிவிட்டால் எலி தொல்லை நீங்கும். இப்படி தினமும் செய்து வந்தால் நமது வீட்டுப் பக்கம் எலி வரவே வராது.
வெள்ளைப்பூண்டு: வெள்ளைப்பூண்டை ஒரு டம்ளரில் தண்ணீருடன் கலந்து அந்தத் தண்ணீரை எலிகள் வரும் இடத்தில் தெளித்து விடுங்கள். வெள்ளைப்பூண்டு வாசனைக்கு எலிகள் ஓடி விடும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் எலிகள் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்.
அமோனியா: அமோனியா கூட எளிய வீட்ல வரவிடாமல் தடுக்கும். 2 ஸ்பூன் அம்மோனியாவை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு வீட்டில் எலி சுத்தும் இடங்களில் தெளிக்க வேண்டும். இந்த அமோனியா வாசனைக்கு எலிகள் வீட்டை விட்டு ஓடிவிடும்.
புதினா எண்ணெயை: புதினா எண்ணெயை கண்டாலும் எலிகள் ரொம்ப பயப்படும். ஒரு காட்டன் துணியை எடுத்துக் கொண்டு அதில் புதினா எண்ணெயை ஊற்றி எலிகள் வரும் இடத்தில் போடவும். இப்படி தினமும் செய்து வந்தால் புதினா வாசனைக்கு எலிகள் பயந்து ஓடி விடும்.
பேக்கிங் சோடா: பேக்கிங் சோடாவை எலிகள் சுத்தும் இடத்தில் தூவிவிட்டால் எலிகள் பயந்து ஓடி விடுகிறது.
லவங்கம்: எலிக்கு சுத்தமா பிடிக்காது எனவே எலிகள் சுற்றும் இடத்தில் 5 லவங்கம் துண்டுகளைப் போட்டு விடுங்கள். எலிகள் சுத்தமா வரவே வராது.
தக்காளி: ஒரு தக்காளியை எடுத்துக் கொண்டு அதை இரு துண்டுகளாக வெட்டி, அதில் 2 துண்டுகளிலும் மிளகாய் பொடியை சேர்த்து அதன் மேல் நாட்டு சர்க்கரையை தேய்க்கவும் அதை எலிகள் வரும் இடத்தில் வைத்துக் கொள்ளவும் இந்த வாசனைக்கு எலிகள் வரவே வராது.
நொச்சி இலை: நொச்சி இலை எலிகள் நடமாடும் இடத்தில் வைத்தால் எலிகள் வரவே வராது. ஏன் என்றால் வயல் வெளிகளில் விவசாயிகள் இந்த இலைகளை தான் பயன்படுத்துகிறார்கள்.
எருக்கம் இலை: எருக்கம் இலை எலிகள் நடமாடும் இடத்தில் வைத்தால் எருக்கம் இலை வாசனைக்கு எலிகள் வரவே வராது. எருக்கம் இலையை வீட்டில் பயன்படுத்தும் போது குழந்தைகள் அதனை எடுக்காமல் பார்த்துக் கொள்ளவும். எருக்கம் இலையை தொட்டால் கொஞ்சம் அரிப்பு ஏற்படும். மூன்று எருக்கம் இலைகளை எலிகள் நடமாடும் இடத்தில் போடுங்கள் எலிகள் வரவே வராது.
இந்த டிப்ஸ்களில் ஏதாவது ஒன்று ஃபாலோ பண்ணி எலி தொல்லையில் இருந்து இருந்து விடுதலை பெறுங்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).