தமிழ்த்திரையுலகில் துணிச்சல் மிக்க நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். நடிகர் சங்கத்தின் தலைவராகவும் இருந்த இவர் அப்போது பல நல்லப்பணிகளை முன்னெடுத்தார். அதுமட்டும் இல்லாமல் கேப்டன் என தன் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.
ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் காலத்திலேயே விஜயகாந்த் தேமுதிகவை துவங்கி அனைவரையும் புருவம் உயர்த்த வைத்தார். நடிகராக இருந்தாலும் ஏழைத் தொண்டர்களை எப்போதும் தனிக்கவனம் செலுத்தி கவனிப்பார். கடந்த 2006 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் தேமுதிக முதன் முதலாக உதயமாகி தனித்துப் போட்டியிட்டது. ஆனால் அந்தத் தேர்தலிலேயே 8 சதவிகித வாக்குகளைப் பெற்று தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக தேமுதிக உருவெடுத்தது. அதே நேரம், அந்தத் தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் விஜயகாந்த் மட்டுமே வெற்றிபெற்றார். அதன் பின்னர் அதிமுகவோடு அணி சேர்ந்த தேமுதிகவுக்கு, திமுகவை கூட கூடுதல் இடங்கள் கிடைக்க எதிர்கட்சி வரிசையில் அமர்ந்தது. நாளடைவில் விஜயகாந்த் உடல்நிலை மோசமாக தேமுதிகவும் பலவீனமடையத் துவங்கியது.
இந்த சூழலில் கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணிக்கு தலைமை வகித்த தேமுதிக ஒரு இடத்தில் கூட ஜெயிக்கவில்லை. அண்மையில் முடிந்த தேர்தலில் அமமுகவோடு இணைந்து தேர்தலை சந்தித்த தேமுதிக ஒரு இடத்தில் கூட ஜெயிக்கவில்லை. இப்போது கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனக் கதையாக அந்தக் கட்சி உள்ளது.
விஜயகாந்த் சினிமாவுக்காக எந்த ரிஸ்க்ம் எடுப்பவர் ஆவார்.எந்த ரிஸ்கான காட்சியிலும் டூப் இல்லாமல் நடிப்பார். இதோ இங்கேயும் அப்படித்தான். கேப்டன் விஜயகாந்த் ஏவிஎம் தயாரிப்பில் வெளியான சேதுபதி ஐபிஎஸ் என்னும் படத்தில் மிகவும் உயரமான ஒரு இடத்தில் துளியும் அச்சமோ, டூப்போ இல்லாமல் ஏறி நிற்கிறார். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.
Re-visit this scene. #Vijayakanth #SethupathiIPS pic.twitter.com/r1cuDGHeJC
— Aruna Guhan (@arunaguhan_) June 30, 2022
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).Re-visit this scene. #Vijayakanth #SethupathiIPS pic.twitter.com/r1cuDGHeJC
— Aruna Guhan (@arunaguhan_) June 30, 2022