எண் 4 (4,13,22,31) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்.! இவர்கள் இப்படித் தான் இருப்பார்களாம்..!! நீங்களும் இப்படியா..?
நான்காம் எண்ணும் மற்ற எண்களைப் போலவே சிறப்பு வாய்ந்ததாகவே இருக்கும்.
நான்கு திசைகள், நான்கு வேதங்கள், நான்கு உபாயங்கள் என நான்காம் எண்ணுக்கு தனித்தன்மைகளும் உண்டு.
4,13,22, 31 ம் திகதிகளில் பிறந்தவர்கள் நான்காம் எண்ணுக்குரியவர்களாகிறார்கள்.
நான்காம் எண்ணின் கிரகம் ராகுவாகும்.
நான்காம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் D,M,T ஆகியவை. ராகு ஒரு சாயாகிரகமாகும்.
குண அமைப்பு:நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் ராகுவின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்கள் என்பதால் அதிக பிடிவாத குணம் இருக்கும்.
அடக்கமாகவோ, விட்டுக் கொடுக்கும் பண்பாகவோ பேசத் தெரியாது. எப்பொழுதும் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசுவார்கள்.
அழுத்தம் திருத்தமாகவும் திட்ட வட்டமாகவும் இவர்களின் பேச்சு அமையும்.
பிறருடைய அந்தஸ்தையோ, வளத்தையோ செல்வத்தையோ,
பின்னால் இருக்கும் பலத்தையே பற்றி சற்றும் தயக்கம் காட்டாமல் மனதில் பட்டதை தைரியமாக, வெளிப்படையாக கூறக்கூடிய இயல்பு கொண்டவர்களாக இருப்பார்கள்.
எல்லா இடங்களிலும் தங்கள் கருத்துக்களையே நிலை நிறுத்த முயற்சிப்பார்களே தவிர பிறருடைய கருத்தை செவி கொடுத்தும் கேட்க மாட்டார்கள்.
சண்டை போடுவது போல எப்பொழுதும் குரல் உச்ச ஸ்தானியில் ஒலிக்கும். எவ்வளவுதான் நல்ல பயன்கள் இருந்தாலும் பிறர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் மனதில் பட்டதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
ஒளிவு மறைவற்ற இவர்களின் அதிகாரமான பேச்சால் பல இன்னல்கள் சந்திக்க நேரிடும்.
இவர்களை புரிந்து கொள்பவர்களால் மட்டுமே இவர்களை அனுசரித்துச் செல்ல முடியும்.
இந்த உலகத்தில் தனக்கு தெரியாத விஷயங்கள் இல்லை என்ற ஆணவம் அதிகம் இருக்கும்.
புகழிலோ, பொருளிலோ அவ்வளவு ஆசை இருக்காது.
எல்லோரும் தன் கருத்துக்களை புரிந்து கொண்டு பாராட்ட வேண்டும் என்று எதிர் பார்ப்பார்கள்.
பொதுவாகவே இவர்கள் எதிலும், சட்டென உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள்.
பொது நல காரியங்களுக்காக தம் உயிரையும் தியாகம் செய்ய தயங்க மாட்டார்கள்.
காதல் விவகாரங்களில் ஈடுபடுபவதும் உண்டு. அதில் முழு வெற்றி கிடைக்கும் என்று கூறி விட முடியாது.
எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் ஒரு தீவிரவாதியாக செயல்படுவார்கள்.
திடீர் அதிர்ஷ்டங்களைக் காட்டிலும் உழைத்து முன்னேறுவதிலேயே அதிக விருப்பம் கொண்டவர்கள்.
சிலர் நடுத்தர வயதுக்கு மேல் ஞானிகள், துறவிகள் போல மாறி விடுவதும் உண்டு.
எந்தக் காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை ஆராயந்த பிறகே முடிவெடிப்பார்கள்.
உடலமைப்பும், ஆரோக்கியமும்
நான்காம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் சற்று தடித்த உடலமைப்பை பெற்றிருப்பார்கள்.
நடுத்தர உயரமும், வட்ட வடிவமான முகத்தோற்றமும் இருக்கும்.
இவர்களுக்கு எப்பொழுதும் ஏதாவது உடல் உபாதைகள் இருந்து கொண்டே இருக்கும். கருப்பாகவோ அல்லது மாநிறமாகவோ இருப்பார்கள்.
இவர்களுடைய கால்கள் உடலுக்கு கேற்றபடி இல்லாமல் குறுகலாக இருக்கும்.
மற்றவர்கள் ஒருமுறை பார்த்தவுடன் மறுமுறை திரும்பிப் பார்க்க வைக்கக்கூடிய உருவ அமைப்பைப் பெற்றிருப்பார்கள்.
இவர்கள் நல்ல உழைப்பாளிகள் என்பதால் உடல் சோர்வு முதுகு தண்டு வலி, மூட்டு வலி போன்றவை ஏற்படும்.
மன உளைச்சல் அதிகம் இருக்கும். தேவையற்றவைகளுக்கெல்லாம் குழப்பிக் கொள்வார்கள்.
காரசாரமான பொருட்களை அதிகம் சாப்பிடுவதால் வயிறு சம்பந்தமான வியாதிகளும், வாயுத் தொல்லைகளும் உண்டாகும்.
சிறுநீரகக் கோளாறு, வறட்டு இருமல், சளி, சுவாச கோளாறு போன்றவைகளால் அடிக்கடி பாதிப்பு உண்டாகும்
குடும்ப வாழ்க்கை.
நான்காம் எண்ணுரிக்குரியவர்கள் குடும்ப வாழ்க்கை ரீதியாக அதிர்ஷ்ட சாலிகள் என்றே கூறலாம்.
ஏனெனில் இவர்களுக்கு இளம் வயதிலேயே திருமணம் நடைபெற்று விடக்கூடிய சூழ்நிலைகள் மிக அதிகம்.
இதனால் இவர்களுக்கு குடும்பத்தை நடத்தக்கூடிய பொறுப்பு வந்து விடுகிறது.
அதற்கேற்றால் போல இவர்களுக்கு அமையும் வாழ்க்கைத் துணையும் அமைதியுடனும், தெய்வ பக்தியுடனும் அமைந்து விடுவதால் கணவன், மனைவி இருவருக்கும் பிரச்சினைகள் வருவதென்பது மிகவும் அரிதாகும்.
கெட்ட பழக்க வழக்கங்களுக்கு எளிதில் அடிபணிபவராக இருப்பார்.
எதிலும், கவனமுடன் நடந்து கொண்டால், இவர்களின் குடும்ப வாழ்க்கை மற்றவர்கள் பின்பற்றக்கூடியதாக இருக்கும்.
பொருளாதாரம்.
நான்காம் எண்ணில் பிறந்தவர்களுக்கு பணம் எப்போதுமே பற்றாக்குறையாகத்தான் இருக்கும்.
எவ்வளவுதான் சம்பாதித்தாலும் அதற்கேற்ற செலவுகளும் உண்டாகும் என்றாலும் இவர்கள் செய்யும் செலவு வீண் செலவாக இருக்காது.
தாராள மனம் கொண்டவர்கள் என்பதால், யாராவது கஷ்டத்தை சொல்லி உதவி கேட்டால் கையில் இருப்பதை கொடுத்து விடுவார்கள்.
சொந்த செலவுக்காக திண்டாட வேண்டியிருக்கும் என்றாலும் எதையும் துணிவுடன் சமாளிக்கும் ஆற்றலும் இருக்கும்.
தொழில்.
நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் எந்த தொழில் செய்தாலும் அதில் அதிக அக்கறையும் கவனமும் கொண்டிருப்பார்கள்.
நாம் நன்றாக இருக்கிறோமோ இல்லையோ மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தோடு செயல்படுவார்கள்.
அரசாங்க உத்தியோகத்திலும் பெரிய அதிகாரிகளாகவும் இருக்க வாய்ப்புண்டு என்றாலும், பலர் அடிமைத் தொழில் செய்பவர் களாகவே இருப்பார்கள்.
ஹாஸ்டல், ஹோட்டல் நடத்துபவர்களாகவும், ஆல்கஹால் போன்றவை கலந்த மருந்துகளையும் விற்பனை செய்பவர்களாகவும் இருப்பார்கள்.
அச்சுத் தொழில், இயந்திரத் தொழில், இன்ஜினியர்ஸ், பௌதீக ஆராய்ச்சி தொழில் போன்றவற்றிலும் முன்னேற்றம் உண்டாகும்.
நண்பர்கள், பகைவர்கள்:நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் முரட்டு சுபாவம் கொண்டவர்கள் என்பதால் இவரக்ளுக்கு நண்பர்கள் அமைவது சற்றுக் கடினமான காரியமாகும் என்றாலும், தாராள குணம் இருப்பதால் சில நண்பர்கள் அமைய வாய்ப்பு உண்டு.
5,8 ம் எண்ணில் பிறந்தவர்கள் நண்பர்களாகவும் 1,29 ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களிடம் ஒற்றுமையாக செயல்பட முடியாதவர்களாகவும் இருப்பார்கள்.
ராகுவுக்குரிய காலம்:ராகுவுக்கு என தனிப்பட்ட முறையில் நாள் கிடையாது.
ஜோதிட, சாஸ்திர ரீதியாக சனிக்கிழமையை ராகுவுக்கு உரியதாக கருதலாம்.
ஒவ்வொரு நாளும் ராகு காலம் என்று ஒன்றரை மணி நேரம் ராகுவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் எந்த சுபகாரியத்தையும் செய்யாதிருப்பது நல்லது.
ராகுவுக்குரிய திசை.
தெற்கு திசை ராகுவுக்குரியது.
பாலைவனங்கள், குகைகள், சுடுகாடு, புற்று, சுரங்கம், ஓட்டு வீடு, பாழடைந்த கட்டிடங்கள், உலர்ந்துபோன் நிலங்கள் போன்றவை ராகுவுக்கு சொந்தமான இடங்களாகும்.
ராகுவுக்குரிய அதிர்ஷ்ட கல்:நான்காம் என் ராகுவின் ஆதிக்கத்தில் இருப்பதால் 4ம் எண் உடையவர்கள் கோமேதகத்தை அணிய வேண்டும்.
தேனின் நிறத்தைக் கொண்ட கோமேதகத்தை அணிவதால் உடல் நலம் சிறப்படையும்.
எடுக்கும் காரியங்களில் வெற்றி, செய்யும் தொழில் மேன்மை, செல்வம், செல்வாக்கு உயரும்.
அனைத்து நற்பலன்களும் உண்டாகும்.
பரிகாரங்கள்
நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் ராகு பகவானுக்கு பரிகாரங்கள் செய்வது உத்தமம்.
ராகு காலங்களில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு போன்ற நாட்களில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி,
கஸ்தூரி மலர்களால் அலங்கரித்து அர்ச்சனை செய்வது உத்தமம். ராகு காலங்களில் சரபேஸ்வரரையும் வழிபடலாம்.
அதிர்ஷ்டம் தருபவை.
அதிர்ஷ்ட திகதி : -1,10,19,28, அதிர்ஷ்ட நிறம் – மஞ்சள்,
அதிர்ஷ்ட திசை – கிழக்கு, அதிர்ஷ்ட கிழமை – ஞாயிறு, அதிர்ஷ்ட கல் – கோமேதகம், அதிர்ஷ்ட தெய்வம்- துர்க்கை