பள்ளிக்கூடத்தில், ஏன் நம்மோடு அக்கம், பக்கத்து வீட்டுக்களில் விளையாடிய நட்பு காலம் முழுவதும் மறக்க முடியாது. கால ஓட்டத்தில் தனித்தையே வாழ்க்கைப் பாதை மாறிவிட்டாலும், பார்த்ததும் உரிமையோடு பேச, கோபப்பட முடியக்கூடிய உறவு இதுதான்! அதிலும் கிராமத்து மனிதர்கள், கிராமத்து வாழ்க்கை தரும் சுகமெல்லாம் வேற லெவல் என்றே சொல்லிவிடலாம்.
ஒவ்வொரு வீட்டிலும் வயோதிகர்கள் இருப்பது வரம். அவர்கள் தான், நம்மை சிறப்பாக வழிநடத்துவார்கள். அதிலும் தாத்தா, பாட்டிகளோடு வளரும் பேரக்குழந்தைகள் மிகவும் பொறுப்புடன் வளர்கின்றன. இது ஒருபக்கம் இருக்க தாத்தா, பாட்டிகள் அருமை இன்றைய தலைமுறைக்கு தெரிவதில்லை. அதனால்தான் குழந்தைகள் தங்கள் தாத்தா, பாட்டியின் பரிட்சயம் இல்லாமல் வளர்கின்றன. அவர்களுக்கு அதனால் அன்பென்னும் பெரும் உலகும் கிடைப்பதில்லை.
தாத்தா, பாட்டிகள் பேசுவதைக் கேட்கவே மிகவும் இனிமையாக இருக்கும். இங்கேயும் ஒரு குட்டிக் குழந்தை தன் தாத்தா மீது அன்பாக இருக்கிறான். தன் விவசாய தாத்தா வயலுக்கு வரும் போதெல்லாம் அவரோடு கைபிடித்து வயலுக்கு வந்துவிடுகிறான். அதிலும் அந்த பொடியனின் தாத்தா, வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச வாய்க்காலை வெட்டிவிட வந்தார். அப்படியான சூழலில் இந்தப் பொடியன் தோட்டத்துக்கு தண்ணீர் செல்லும் பாதையில் தன் தாத்தா உடன் இருக்கும் தைரியத்தில், துளிகூட அச்சம் இன்றி மிகவும் உற்சாகமாகக் குளியல் போடுகிறான்.
என்னதான் பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் கிடைக்காத சொர்க்கம் இது. இந்த மகிழ்தருணம் இந்த குழந்தைக்கு, அதுவும் கிராமத்து வாழ்க்கையில் தான் கிடைக்கும் என இணையவாசிகள் இதை பகிர்ந்து வருகின்றனர்.