ஒருவரது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் விதைகளும் முக்கிய பங்கை வகிக்கிறது. விதைகள் மிகச்சிறப்பான ஸ்நாக்ஸ் ஆகும். விதைகள் பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும், அவற்றில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் இதர அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஏராளமான அளவில் நிரம்பியுள்ளது.
ஸ்நாக்ஸாக சாப்பிடுவதற்கு எத்தனையோ விதைகள் உள்ளன. அதில் பூசணி விதைகள், சூரிய காந்தி விதைகள், ஆளி விதைகள், எள்ளு விதைகள், சியா விதைகள், கசகசா போன்றவை குறிப்பிடத்தக்கவை.
இந்த ஒவ்வொரு விதைகளிலுமே நாம் நினைத்திராத அளவில் ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. இப்போது இக்கட்டுரையில் நாம் பார்க்கப் போவது பூசணி விதைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தான்.
பூசணி விதைகளில் மக்னீசியம், மாங்கனீசு, காப்பர், புரோட்டீன் மற்றும் ஜிங்க் போன்ற உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் போதுமான அளவில் நிறைந்துள்ளது.
இந்த பூசணி விதைகளை ஒருவர் அன்றாடம் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்த்து தெரிந்து, இனிமேல் அதைத் தவறாமல் சாப்பிடுங்கள்.