மாதவன்..
தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் 17வது பள்ளி மாணவர் ஒருவரை, அவரது நண்பர்களே கொலை செய்து கிணற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருவதும், அதன் காரணமாக பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடப்பதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதே போன்ற சம்பவம் ஒன்று தேனி மாவட்டத்தில் நடந்துள்ளது. உத்தமபாளையத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் மாதவன்(16). கடந்த 18ஆம் திகதி நண்பர்களுடன் விளையாட சென்ற மாதவன், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.
இதனால் பதறிப்போன மாணவரின் பெற்றோர் பொலிசில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து பொலிசார் பல இடங்களில் மாணவரை தேடிய நிலையில், பாழடைந்த கிணற்றில் சடலமாக அவரை மீட்டனர்.
அதன் பின்னர் சந்தேகத்தின் பேரில் மாதவனின் நண்பர்களான 17 சிறுவர்கள் இருவரையும், அல்லா பிச்சை என்ற இளைஞர் ஒருவரை பொலிசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் கூறிய விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாதவனிடம் அவர்கள் ஆயிரம் ரூபாய் கொடுத்து கஞ்சா வாங்கி வர கூறியுள்ளனர். ஆனால் மாதவன் அவ்வாறு செய்யாததால் ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலை செய்து, பின்னர் கிணற்றில் வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
பள்ளி மாணவர்கள் போதைப்பொருளுக்காக நண்பரையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.