ஐயா! எனக்கு கல்யாணம் ஆகி ஒன்றரை மாசம் தான் ஆகுது; ஆனா, என் பொண்டாட்டி இப்ப 4 மாசம் கர்ப்பம்; காவல் நிலையத்தில் கதறிய இளைஞர்..!!

திருமணமாகி கொஞ்ச நாளிலேயே மனைவி கர்ப்பமாக இருப்பது தெரிந்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் உத்திர பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர்.உத்திர பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றிருக்கிறது.

இந்நிலையில், தனது கணவரின் வீட்டில் வசித்து வந்த அந்த இளம் பெண், அடிக்கடி தனக்கு வயிறு வலி ஏற்படுவதாக கூறியுள்ளார்.இதனால் கவலையடைந்த கணவரும் மருத்துவமனைக்கு தனது மனைவியை அழைத்துச் சென்றுள்ளார்.மருத்துவனையில் புதுமணப் பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், சோனோகிராஃபி எடுக்கும்படி கூறியுள்ளனர்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற பரிசோதனைகளில் இளம்பெண் 4 மாத கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கணவரிடத்தில் கூறியுள்ளனர்.இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தனக்கு திருணமாகி ஒன்றரை மாதங்கள் மட்டுமே ஆவதாக தெரிவிக்கவே, மருத்துவமனையில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதனையடுத்து மணமகனின் வீட்டார் அந்த பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு சென்றிருக்கின்றனர்.இதனை தொடர்ந்து அந்த இளம்பெண்ணிற்கு எதிராக மகாராஜ்கஞ்ச் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் அந்த கணவரின் குடும்பத்தினர்.

அதில், மணப்பெண்ணும் அவரது குடும்பத்தினரும் திட்டமிட்டே தங்களை ஏமாற்றியிருப்பதாகவும், பெண் கர்ப்பமாக இருப்பதை அறிந்த பின்னரும் அதனை மறைத்து மணமகள் வீட்டார் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள் என்றும் மணமகனின் வீட்டார் தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.மேலும், அப்பெண்ணை தங்களது வீட்டிற்கு இனி அழைத்துச் செல்ல முடியாது எனக்கூறி போராட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரி அபிஷேக் சிங்,”மணமகனின் வீட்டார் கொடுத்த புகார் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.உத்திர பிரதேசத்தில் திருமணமான ஒன்றரை மாதத்தில் மணமகள் 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவரவே, மணமகன் காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பது அப்பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Shares