நடிகர் விஜயகாந்தின் கால் விரல்கள் அகற்றப்பட்டதற்கு உண்மை காரணம்! நீரிழிவு நோயாளிகளே எச்சரிக்கை!

நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த், நீரிழிவு பாதிக்கப்பட்டு 3 விரல்கள் அகற்றப்பட்ட சம்பவம் ரசிகர்களை பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும், அவரது காலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததன் காரணமாக அறுவை சிகிச்சை செய்து 3 விரல்கள் அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், விஜயகாந்த் கால் விரல்கள் அகற்றப்பட்டதற்கான காரணத்தை விளக்கியுள்ளார் மருத்துவர். அதில், இதற்கு காரணம் நோயின் அலட்சியம் அறியாமை தான். சர்க்கரை நோய்யை விலக்குவது குறைவு.

அந்த நோயை கட்டுக்குள் தான் வைக்க முடியும். கேப்டன் விஜயகாந்த் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்காமல் இருந்திருக்கலாம். இதனால் இவை மிக முக்கியமாக இரத்த குழாயை தான் பாதிப்படைய செய்யும்.

நடிகர் விஜயகாந்தின் கால் விரல்கள் அகற்றப்பட்டதற்கு உண்மை காரணம்! நீரிழிவு நோயாளிகளே எச்சரிக்கை!

அப்போ உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை எங்கு எல்லாம் ரத்தம் பாய்கிறதோ இந்த சர்க்கரை நோய் பிரச்சினை அதிகமாக இருக்கும்.

இதில் மிக முக்கியமாக இருப்பது கால்கள். ஏனென்றால், கால்களில் எல்லா ரத்தமும் கிழே போய் மீண்டும் மேலே வர செய்கிறது. வயதாக கால்களில் சில பேருக்கு பொதுவாகவே சோர்வாக இருக்கும்.

மேலும் சர்க்கரை நோய் கூட சேரும் போது, பாத நோய், இரத்த பரிமாற்றம் குறைவாக இருக்கும். இதனால், பாதிப்புகள் உண்டாகி மோசமடைய செய்யும்.

அப்போது சில பேருக்கு நகம், விரல்கள், தோல் போன்ற பாதிப்புகள் உண்டாகும். அதுவரை பாதிக்காமல் இருக்க சரியான சர்க்கரை நோயை கட்டுக்குள் வைப்பது மிக அவசியமான ஒன்று.

அப்படி தான் விஜயகாந்திற்கு ஏற்பட்டுள்ளது என நினைக்கிறேன். எனவே நீரிழிவு நோயாளிகள் கட்டாயம் கவனத்துடன் உடல் நிலையை பராமரிக்கவும் என கூறியுள்ளார்.

மறக்காமல் இதையும் படியுங்க   யாழில் விற்பனையில் ஈடுபட்ட 13 வயது சிறுமி; பெற்றோரை கைது செய்ய உத்தரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *