ஈக்கள், கொசு, கரப்பான்பூச்சி, மூட்டை பூச்சி, வண்டு சிண்டு என வீட்டில் நம்மோடு பலவகை பூச்சிகளும் குடித்தனம் நடத்தி வரும். சில பூச்சிகள் வீட்டில் இருப்பதும் தெரியாது, போவதும் தெரியாது, வண்டுகளை போல.ஆனால், சிலவன நம்மை நிம்மதியாக ஓரிடத்தில் உட்கார விடாது, 10 நிமிடங்கள் கூட தூங்கவிடாது தொல்லை செய்துக்கொண்டே இருக்கும், மூட்டை பூச்சிகளை போல.
இவற்றை எல்லாம் துரத்த வெளியில் கடையில் இருந்து இரசாயன மருந்துகளை வாங்கி கொண்டு வந்து அடித்தால், நாம் தான் ஓர் நாள் வீட்டை விட்டு வெளியில் இருக்க வேண்டுமே தவிர, அவை வீட்டில் ஜம்மென்று இருக்கும்.
வீட்டில் தொல்லை செய்யும் பூச்சிகளை விரட்ட, இயற்கையான எளிய வழிகள் இருக்கும் போது ஏன் வீணாக சிரமப்பட வேண்டும்….வாருங்கள் வீட்டில் உள்ள குட்டிகுட்டி பூச்சிகளுக்கு குட்பாய் சொல்லுங்க பழ ஈக்களை விரட்ட டிப்ஸ்