அனைவருக்குமே நன்கு வெள்ளையாகவும், அழகாகவும் மாற வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக கடைகளில் விற்கும் நிறைய அழகுப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். ஆனால் எந்த பலனும் இருக்காது.
அவ்வாறு பாக்கெட்டில் இருக்கும் பணத்தை செலவழித்து, கெமிக்கல் கலந்த அழகுப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவதை விட, ஒருசில இயற்கை முறைகளை பின்பற்றினால், சருமம் அழகாக இருப்பதோடு, ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
என்ன இயற்கை முறைகள் என்று கேட்கலாம். அது வேறொன்றும் இல்லை, முகத்தை கழுவுதல், ஃபேஸ் பேக் போடுதல், நிறைய தண்ணீர் குடித்தல், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுதல், உடற்பயிற்சிகளை பின்பற்றுதல் என்று பல உள்ளன. அதுமட்டுமின்றி, சருமம் கருப்பாக மாறக்கூடாதெனில், ஒருசில செயல்களை தினமும் செய்து வர வேண்டும்.
அத்தகைய செயல்கள் என்னவென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து தினமும் செய்து வந்தால், நாளடைவில் ஒரு நல்ல பலனைப் பெறலாம். அதிலும் இத்தகைய செயல்களை பின்பற்றினால், நாட்களிலேயே ஒரு நல்ல வித்தியாசம் சருமத்தில் தெரியும். சரி, அது என்னவென்று பார்ப்போமா!!!