பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை அறிவிப்பு

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்திற்கும் நாளையதினம் (17) விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கல்வி அமைச்சு சற்றுமுன் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இவ்வாறு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கு முன்னர் எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.