மருத்துவ உலகில் அதிசயம்! 100% புற்றுநோயை குணப்படுத்தும் மருந்து கண்டுப்பிடிப்பு; விலை எவ்வளவு தெரியுமா?

மருத்துவ உலக வரலாற்றிலேயே புற்றுநோயை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடித்துள்ள தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அமெரிக்கா மேன்ஹட்டானில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் என்ற இடத்தின் நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்த்தில் நடத்தப்பட்ட சோதனையில், புற்றுநோயை 100% குணப்படுத்தும் டோஸ்டார்லிமாப் (dostarlimab) என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இச்சோதனையில், பங்கேற்றவர்களுக்கு கீமோதெரபி மருத்துவ சிகிச்சைகளை வழங்காமல், டோஸ்டார்லிமாப் மருந்து கொடுத்தே நோயாளிகளை குணமடைய செய்துள்ளனர்.

மருத்துவ உலகில் அதிசயம்! 100% புற்றுநோயை குணப்படுத்தும் மருந்து கண்டுப்பிடிப்பு; விலை எவ்வளவு தெரியுமா?
சோதனையில் வெற்றி

அதன்படி, மொத்தம் 18 குடல் புற்றுநோயாளிகளுக்கு இந்த மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து கொடுத்தபின் அவர்கள் முற்றிலும் அந்த நோயில் இருந்து குணமடைந்து உள்ளனர். எம்.ஆர்.ஐ, பிஇடி எனப்படும் பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி என்று அனைத்து சோதனையிலும் கேன்சர் உடலில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நோயாளிகளுக்கு ஏற்கனவே சில விதமான சிகிச்சைகளை கொடுத்து குணப்படுத்த முடியாத நிலை இருந்தது. அதன் பின்னர் கண்டுப்பிடிக்கப்பட்ட டோஸ்டர்லிமாப் என்று மருந்து கொடுக்கப்பட்டு அவர்கள் குணப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இதற்காக அவர்களுக்கு உடலில் எவ்விதமான ஆப்ரேஷனும் நடத்தப்படவில்லை. பொதுவாக கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைக்கு பின் பக்க விளைவுகள் இருக்கும்.

மருத்துவ உலகில் அதிசயம்! 100% புற்றுநோயை குணப்படுத்தும் மருந்து கண்டுப்பிடிப்பு; விலை எவ்வளவு தெரியுமா?
சிகிச்சைக்கு பின் கேன்சர ஏற்படவில்லை

ஆனால் இந்த மருந்தில் அவர்களுக்கு எவ்விதமான பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. சிகிச்சை பெற்று 25 மாதங்கள் கழிந்தும் அவர்களுக்கு மீண்டும் கேன்சர் செல்கள் எதுவும் தோன்றவில்லை என மருந்தை ஸ்பான்சர் செய்த கிளாக்ஸோ (Glaxo Smithkline) ஸ்மித்க்லைன் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆய்வு கட்டுரையை எழுதிய டாக்டர் ஆண்ட்ரியா செரிக், விவரிக்கையில், “புற்றுநோய் வரலாற்றில் இதுவே முதல் முறை” கேன்சர் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு டோஸ்டர்லிமாப் (dostarlimab) மருந்து உடலில் மூன்று வாரங்களு ஒரு முறை செலுத்தப்படும்.
விலை என்ன தெரியுமா?

மொத்தம் 6 மாதங்கள் மருந்து செலுத்தப்படும். உடலில் இருக்கும் கேன்சர் செல்களை அடையாளப்படுத்த இது உதவும் என தெரிவித்தார்.

மேலும், இந்த மருந்து மார்க்கெட்டிற்கு வரும் போது இந்திய மதிப்பில் இதன் சிகிச்சைக்கு இப்போதே 9 லட்சம் ரூபாய் ஆகலாம் எனக்கூறுகிறார்கள்.

அதே சமயம் இந்த மருந்தை ஆராய்ச்சியாளர்கள் உரிய ஆய்வை செய்ய வேண்டும். அதன் பின்பே மார்க்கெட்டிற்கு வரும்.

மறக்காமல் இதையும் படியுங்க   மைம் கோபி வெளியிட்ட கடைசி உரையாடல் இது தான்

அதற்கு சில மாதம், அல்லது வருடங்கள் கூட ஆகலாம். இந்த மருந்து எத்தனை காலத்தில் நோயாளிகளை குணமாக்கும் என்பதிலும் சில சந்தேகம் உள்ளதால் அதை பற்றி தொடர் ஆய்வுகளும் நடத்தப்படுமாம்….

Shares