இந்தியா மாநிலம் கர்நாடகாவில் இறந்த கணவர் உயிருடன் வந்துள்ளதாக நாகப் பாம்புடன் மூதாட்டி ஒருவர் நான்கு நாட்கள் வாழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடக மாநிலம், பாகல்கோட்டை மாவட்டத்தின் குல்லஹள்ளி கிராமத்தை சேர்ந்த மூதாட்டி மானஷா. சில ஆண்டுகளுக்கு முன்னர் இவரது கணவர் சரவல்லா மவுனேஷ் கம்பாரா இறந்துவிட்டார்.
இந்த நிலையில் மானஷா நாகப் பாம்பு ஒன்றுக்கு தனது வீட்டில் பால் ஊற்றி வந்துள்ளார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் பாம்பை பிடிக்க முயன்றபோது, மானஷா அவர்களை தடுத்துள்ளார்.
உயிரிழந்த கணவர் மறுபிறவி எடுத்து வந்துவிட்டார்! நாகப்பாம்புடன் வாழ்ந்த பெண்… அதிர்ச்சி சம்பவம்
அப்போது அவர் கூறிய விடயம் தான் அப்பகுதியினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வீட்டில் புகுந்த பாம்பை, தனது கணவரின் மறுபிறவி என மூதாட்டி நினைத்துள்ளார்.
உயிரிழந்த கணவர் மறுபிறவி எடுத்து வந்துவிட்டார்! நாகப்பாம்புடன் வாழ்ந்த பெண்… அதிர்ச்சி சம்பவம்
அதன் பின்னர் நான்கு நாட்களாக அந்த பாம்புடனேயே அவர் தங்கியிருந்திருக்கிறார். இதனால் தான் பாம்பை பிடிக்கக் கூடாது எனவும், அது தன் வீட்டில் இருந்து வெளியேறக்கூடாது எனவும் கூறி அவர்களுடன் மானஷா வாக்குவாதம் செய்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து வனத்துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மானஷாவிடம் கிராம மக்கள் விளக்கம் அளித்த பின்னர் அவர் பாம்பை பிடித்து செல்ல அனுமதித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.