இந்திய மாநிலம் கேரளாவில் பல நாட்கள் பட்டினி கிடந்ததால், தெருநாய் ஒன்று மற்றோரு நாயை கொன்று தின்ற சம்பவம் நடந்துள்ளது.
கேரள மாநிலம், விழிஞ்சம் அருகே பூங்குளம் என்ற பகுதியில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இதன் அருகே இரண்டு தெருநாய்கள் வெகுநாட்களாக சுற்றித் திரிந்துள்ளன.
ஆனால் உணவு இல்லாமல் இந்த நாய்கள் பல நாட்கள் பசியால் வாடியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இரண்டு நாய்களில் பெரிய நாய், மற்றொன்றை கடித்து கொன்றது.
அதன் பின்னர் இறந்த நாயின் உடல் பாகங்களை கடித்து சாப்பிட்டது. இதனை கவனித்த மக்கள் அந்த நாயை விரட்ட முயன்றனர். ஆனால் அது பலனளிக்கவில்லை.
இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தெருநாய்களுக்கு உணவும், குடிநீரும் மக்கள் முன் வர வேண்டும். அப்போது தான் இதுபோன்ற கொடுமை எல்லாம் நடக்காமல் இருக்கும் என விலங்கின ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.