வனிதாவின் திருமணம் வாழ்க்கை ஏன் அடிக்கடி முறிவடைகின்றது என்பதற்கு பிரபலம் ஒருவர் பகிர்ந்த காரணம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வனிதா விஜயகுமார்
தமிழ் சினிமாவில் சாதித்த விஜயகுமாரின் மகள்களில் ஒருவர் தான் நடிகை வனிதா விஜயகுமார். இவர் தமிழ் சினிமாவில் நடித்தது சில படங்கள் என்றாலும் இவரின் பெயரை கேட்டாலே ரசிகர்கள் குஷியாகி விடுகின்றனர்.
முதல் படமே தளபதியுடன் “சந்திரலேகா” எனும் திரைப்படத்தில் நடித்து பிரபலமாகியிருந்தார். தொடர்ந்து சினிமாவில் டாப் நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்த்த போது திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.
அடுத்தடுத்து நடந்த 3 திருமணம்
வனிதா கடந்த 2000ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஸ்ரீஹரி மற்றும் ஜோவிதா என்று இரு பிள்ளைகள் இருக்கிறார்கள். பின்னர் ஆகாஷை விவாகரத்து செய்து விட்டார்.
இதனை தொடர்ந்து ஆனந்த் என்ற தொழிலதிபரை மணந்தார். இவருக்குஜெயனிதா என்ற மகள் இருக்கிறார். மூன்று பிள்ளைகள் இருந்தாலும் மகன் விஜய் ஹரியை அவரின் தந்தை ஆகாஷ்வுடன் இருக்கிறார்.
இதனிடையே பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் மீடியாத்துறைக்குள் என்றி கொடுத்த வனிதா கடந்த 2020-ம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு பின்னர் அவருடன் ஏற்பட்ட மோதலால் அவரையும் பிரிந்து விட்டார்.
விவாகரத்திற்கு இதுதான் காரணம்
இந்த நிலையில் தற்போது சினிமாவில் ஆர்வம் காட்டி வரும் வனிதா 4 ஆவது திருமணம் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய, சே குவேரா, “ ஆண்கள் மனைவி இல்லாவிட்டால் 2ஆவது திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் பெண்கள் கணவரை இழந்து விட்டால் 2ஆவது திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள்.
இப்படி இருக்கும் பட்சத்தில் வனிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை அனுதாபத்தை தரும் வகையில் அமைந்து விட்டது. முதல்3 திருமணம் முறிந்து விட்டதால் தற்போது 4ஆவது திருமணத்தில் வந்து நிற்கிறார் வனிதா, இவருக்கு தற்போது 50 ஆகிறது. இந்த வயதில் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் முன்னாள் இருந்த 3 திருமண வாழ்க்கையின் பிரிவிற்கு என்ன காரணம் என்பதனை கண்டறிய வேண்டும்.
இதனை விடுத்து, திருமணத்தை அடுக்குவதால் என்ன பயனும் இல்லை. காரணம் தெரியாவிட்டால் இந்த திருமண வாழ்க்கையும் முறிவில் முடியலாம்…” பேசியுள்ளார். பேட்டியில் இவர் பேசியது நெட்டிசன்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
வனிதாவின் இனி வரும் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.