ஊருக்கே மணக்கும் சுவையான நெத்திலி கருவாடு தொக்கு – ருசியாக செய்வது எப்படி?

ஒரு சிலருக்கு கறியை விட கருவாட்டை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். மீனை விட கருவாடு மீது இருக்கும் ருசியை பிடிக்காதவர்களே இருக்க முடியாது.

அதிலும், நெத்திலி கருவாடு என்றால் சொல்லவே வேண்டாம், வாயில் இருந்து எச்சில் ஊற ஆரம்பித்து விடும். அந்த அளவிற்கு சுவையாக இருக்கும்.

அந்த வகையில் நெத்திலி கருவாட்டை சுத்தம் செய்வது முதல் ருசியாக தொக்கு எப்படி வைக்கலாம் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

ஊருக்கே மணக்கும் சுவையான நெத்திலி கருவாடு தொக்கு – ருசியாக செய்வது எப்படி?
சுத்தம் செய்யும் முறை

முதலில் நெத்திலி கருவாட்டை தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். தலைப்பகுதியினுள் கருப்பு நிறத்தில் இருக்கும் கசடுகளை அகற்றி விட வேண்டும்.

பின்னர் வால் பகுதியையும் லேசாக வெட்டி எடுத்து விடுங்கள். இதே போல எல்லா கருவாட்டையும் ஒவ்வொன்றாக எடுத்து சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

அதன் பின்னர் 10 நிமிடத்திற்கு சுடு நீரில் போட்டு ஊற வைத்துவிடுங்கள். அதன்பின் லேசாக அலசி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

பின் சாதாரண தண்ணீரில் மீண்டும் நன்கு அலசுங்கள். இது போல நன்கு சுத்தம் செய்த பின்பு இறுதியாக மஞ்சள் தூள் சேர்த்து நன்கு அலசி பின்னர் தண்ணீரை எல்லாம் வடிகட்டி ஓரமாக வைத்துக் கொள்ளுங்கள்.

ஊருக்கே மணக்கும் சுவையான நெத்திலி கருவாடு தொக்கு – ருசியாக செய்வது எப்படி?
தொக்கு செய்யும் முறை

அடுப்பை பற்ற வைத்து, வாணலியில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்த பின்னர் சின்ன வெங்காயம், பொடி பொடியாக 200 கிராம் அளவுக்கு நறுக்கு சேர்த்துக்கொள்ளுங்கள்.

இதனோடு 5 பச்சை மிளகாயை சேர்த்துக்கொண்டு நன்கு கிளறிவிட வேண்டும். வதங்கிய பின் 3 தக்காளி பழத்தை நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும்.

இவையெல்லாம் நன்கு மசித்த பின்னர் சுத்தம் செய்து வைத்திருந்த நெத்திலி கருவாட்டை சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.

அத்தோடு மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் அளவிற்கு தனி மிளகாய்த்தூள் சேர்த்து மீண்டும் வதங்குங்கள்.

இவற்றின் பச்சை வாசம் போக நெத்திலி கருவாடு சுருள வதங்கியதும், அடுப்பை அணைத்து நறுக்கிய மல்லித்தழை தூவி ஒரு முறை பிரட்டி எடுத்தால் மணக்க மணக்க சுவையான நெத்திலி கருவாடு தொக்கு ரெடி!

Shares