ரிஷப ராசியில் நுழையும் சுக்கிரன்! 10 நாளில் குபேர யோகத்தை அடையும் ராசிகள்

சூரிய குடும்பத்தின் கிரகங்களின் நிலைகள் நம் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

ஜோதிடத்தில், ஒவ்வொரு கிரகங்ளுக்கும் நமது வாழ்க்கையின் சில அம்சங்களுடன், தொடர்பு உள்ளது. ராசி மாற்றங்கள், இந்த கிரகங்களின் இயக்கம் அனைத்து 12 ராசிக்காரர்களையும் பாதிக்கிறது.

ஜோதிடத்தில் சுக்கிரனுக்கு தனி இடம் உண்டு. சுக்ரன் கிரகம் ஆடம்பர வாழ்க்கை, திருமண வாழ்க்கை, காதல், அழகு, ஆகியவற்றின் காரணியாகும்.

இந்த கிரகம் அசுப நிலையில் இருந்தால், அந்த ஜாதகக்காரர் வாழ்க்கையில் வறுமையில் வாழ்கிறார். அதோடு, அவரது காதல் வாழ்க்கை அல்லது திருமண வாழ்க்கை கூட நன்றாக இருக்காது.

சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் மற்றும் மீனத்தின் அதிபதியாகும், அதே நேரத்தில் கன்னி அதன் பலவீனமான ராசியாகும்.

சுக்கிரன் சுபமாக இருக்கும்போது, ​​அந்த நபருக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். ஜூன் 18ல் சுக்கிரனின் ராசி மாறப்போகிறது. இந்த நாளில் சுக்கிரன் ரிஷபம் ராசிக்குள் நுழைவார்.

சுக்கிரன் ராசி மாறியவுடன் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் தொடங்கும். சுக்கிரனின் ராசி மாற்றத்தால் 2 ராசிகளுக்கு பண ஆதாயம் அதிக அளவில் கிடைக்கும்.

ரிஷப ராசியில் நுழையும் சுக்கிரன்! 10 நாளில் குபேர யோகத்தை அடையும் ராசிகள்
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு பொருளாதார பக்கம் வலுவாக இருக்கும். வேலையில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியதில்லை.

நிதி பரிவர்த்தனைகளுக்கு சிறந்த நேரம். மேலும், முதலீடு செய்வதால் லாபம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

தொழில் வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் மரியாதை, கௌரவம் அதிகரிக்கும். புதிய வாகனம், வீடு வாங்கலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.

மனைவியுடன் நேரத்தை செலவிடுவீர்கள். மொத்தத்தில், இந்த சுக்ர பெயர்ச்சி இவர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும்.

ரிஷப ராசியில் நுழையும் சுக்கிரன்! 10 நாளில் குபேர யோகத்தை அடையும் ராசிகள்
சிம்மம்

இந்த சுக்ரன் பெயர்ச்சியில், சிம்ம ராசிக்காரகளுக்கு அதிர்ஷ்ட காற்று சாதகமாக வீசும். நிதி லாபம் அதிகம் இருக்கும்.

குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். தொழில் வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிகுந்த மரியாதை பெறுவீர்கள்.

பதவி, கௌரவம் உயரும். முதலீடு செய்வதால் லாபம் உண்டாகும். புதிய வேலையைத் தொடங்க நல்ல நேரம்.

தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். இந்த நேரம் மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

Shares