90ஸ் காலக்கட்டத்தில் கவர்ச்சி கன்னியாகவும் டாப் நடிகையாகவும் திகழ்ந்து வந்த நடிகை சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது இந்திய சினிமாவையே அதிரவைத்தது.
சில்க் ஸ்மிதாவின் நிறைவேறாத ஆசை
அவர் மரணித்த அக்டோபர் 23 ஆம் தேதியோடு 28 ஆண்டுகள் ஆகிறது. சில்க் ஸ்மிதா பற்றி பல பிரபலங்கள் நினைவுகூர்ந்து பேசி வரும் நிலையில் நடிகை சர்மிளா, அவரின் நிறைவேறாத ஆசை என்ன என்பதை கண்கலங்கியபடி பகிர்ந்துள்ளார்.
என்னை எல்லோரும் கவர்ச்சி நடிகையாகத்தான் பய்ன்படுத்துகிறார்கள். ஆனால் எனக்கு புடவை கட்டவேண்டும், பூ, பொட்டு வைத்துக்கொண்டு நிறைய நகை போட்டுக்கொண்டு இருக்க வேண்டும் என்று ஆசை.
ஆனால் அது முடியாததால் வீட்டில் காலையில் இருந்து நைட் வரைக்கும் பூ பொட்டு வைத்துக்கொண்டு வீட்டிலேயே இருப்பேன் என்று தன்னிடம் வருத்தப்பட்டு கூறியதாகவும் கவர்ச்சி நடிகை என்பதால் அவளின் ஆசை அந்த அறையோடு முடிந்துவிட்டது, அவளைப்போல் ஒரு நல்லப்பெண் பார்க்கவே முடியாது என்று சர்மிளா அழுதபடி கூறியிருக்கிறார்.