பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன.
ஜோதிட சாஸ்த்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.
மேலும், அவர்களின் ஜாதகம் அடிப்படையில் தான் வேலை, பொருளாதார நிலை, திருமணம் என்பவை நிர்ணயிக்கப்படுகிறது.
அந்த வகையில், சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். இந்த சுக்கிரன் செப்டம்பர் 18 ஆம் தேதி தனது சொந்த ராசியான துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார்.
சுக்கிரன் துலாம் ராசியில் நுழைவதால் கேந்திர திரிகோண ராஜயோகமும், மாளவ்ய ராஜயோகமும் உருவாகவுள்ளன.
இந்த திரிகோண யோகத்தால் பணக்கஷ்டத்தில் இருந்து மீண்டு புது வாழ்க்கைக்குள் நுழையப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
1. துலாம் ராசியினர்
- எல்லாத் துறைகளிலும் வெற்றியும் திருப்தியும் கிடைக்கும்.
- நீண்ட நாட்களாக தீர்க்க முடியாத பிரச்சினைகள் இந்த காலப்பகுதியில் இல்லாமல் போகும்.
- மன அமைதி இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் இந்த காலப்பகுதியில் மன அமைதி கிடைக்கும்.
- துலாம் ராசியில் பிறந்தவர்கள் நம்பிக்கையும் மென்மையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
- பணம் சம்பாதிப்பதில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.
- பணத்தில் முதலீடு செய்யும் முயற்சிகள் இருந்தால் சேர்க்கையை காலப்பகுதியில் முயற்சிக்கலாம்.
- வியாபாரம் செய்பவர்கள் பெரிய லாபத்தை அடைவார்கள்.
- திருமணம் நடக்காதவர்களுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்கும்.
2. மகர ராசி
- நிதி ஆதாயங்கள் அதிகம் கிடைக்கும்.
- அனைத்து துறைகளிலும் அதிர்ஷ்டத்தின் பார்வை இருக்கும். இதனால் எந்த முயற்சி செய்தாலும் வெற்றி நிச்சயம்.
- புதிய வருமானத்திற்கான வாய்ப்புகள் பல கிடைக்கும்.
- உறுதியான பேச்சு மூலம் உங்களிடம் இருக்கும் நம்பிக்கை வெளிப்படுத்துவீர்கள்.
- குடும்பம், நண்பர்கள் மற்றும் வாழ்க்கைத் துணைக்கு உணர்வு சரியாக புரிந்து கொண்டு செயற்படுவீர்கள்.
- பல துறைகளில் இருந்து நிதி ஆதாயம் அதிகம் கிடைக்கும்.
- வெளிநாட்டில் வியாபாரம் செய்பவர்கள் நன்மை அடைவார்கள்.
- பொருளாதார நிலை மேம்படுவதால் பணம் உங்கள் வீடுகளில் குவியும்.
3. கும்ப ராசி
- கும்ப ராசியில் பிறந்தவர்கள் இந்த சேர்க்கையால் வெளிநாட்டில் இருந்து பணம் வர வாய்ப்பு உள்ளது.
- வெளிநாட்டில் உயர்கல்வி பெற நினைப்பவர்கள் இந்த காலப்பகுதியில் முயற்சிக்கலாம்.
- கனவு காண்பவர்கள் சேர்க்கை காலக்கட்டத்தில் சாதிக்கலாம்.
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு துலாம் ராசிக்கு உள்ளது.
- போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறலாம்.
- நீண்ட நாட்களாக முடிக்காமல் இருந்த வேலைகளை இந்த மாற்றத்தினால் செய்து முடிப்பீர்கள்.
- அரசு அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
- அரசின் திட்டங்களால் ஆதாயம் அடைவீர்கள்.
- கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பொருளாதார ஆதாயமும் சமூகத்தில் அங்கீகாரமும் கிடைக்கும்.