இரவிலும் சரி, பகலிலும் சரி தூக்கத்தில் கனவு வருவது மிகவும் இயல்பான விடயம் தான். ஆனால் கனவில் வரும் விஷயங்கள் நம் வாழ்வில் நடக்கும் பல நிகழ்வுகளை முன்கூட்டியே எச்சரிப்பதாக கனவு பற்றிய அறிவியவில் குறிப்பிடப்படுகின்றது.
கனவில் வரும் சில விடயங்கள் மங்களகரமானதாக கருதப்படும் அதே வேளை சில விடயங்களை கனவில் காண்பது ஆபத்து குறித்து ஆழ் மனம் எச்சரிப்பதாக அமைகின்றது.
அந்த வகையில் பாம்புகள் பற்றிய கனசுகளை அடிக்கடி காண்கின்றீர்கள் என்றால் அதற்கு என்ன அர்த்தம் மற்றும் அதனால் என்ன பலன்கள் உண்டாகும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பாம்பு பற்றிய கனவுகளின் பலன்கள்
பொதுவாகவே அனைவருக்கும் வாழ்வில் ஒரு முறையேனும் பாம்பு பற்றிய கனவு நிச்சயம் வந்திருக்கும். ஆனால், அதற்கு அர்த்தம் என்ன என்பது குறித்த விளக்கம் நம்மில் பலரிடமும் இருப்பதில்லை.
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ராகுதிசை ராகுபுக்தி நடைபெறுகிறவர்களின் கனவில் தான் பாம்புகள் அடிக்கடி தென்படும் என நம்பப்படுகின்றது.
அதுமட்டுமன்றி கனவ சாஸ்திரத்தின் அடிப்படையில் பாம்புகள் பாலியல் குறியீடாகவும் பார்க்கப்படுகின்றது. அதே போல, ஆண்களுடனும் பாம்புகள் ஒப்பிட்டு கூறப்படுகின்றது.
இதனால் பாம்பு படுக்கையில் விழும் வகையில் கனவு கன்டால் உடல் ரீதியான இன்பத்துக்கு உங்கள் மனம் ஆர்வமாக இருக்கின்றது என்று அர்த்தம்.
அந்து சாஸ்திரங்களின் பிரகாரம் பாம்புகள் தொய்வமாக வழிபடப்படுகின்றன. அந்த வகையில் குல தெய்வத்திற்கு ஏதாவது நேத்திக்கடன் வைத்துவிட்டு அதை மறந்துவிட்டீர்கள் என்றால் பாம்பு கனவில் வந்து அதை நிகைவூட்டும் என்பது ஐதீகம். பாம்பு பற்றிய கனவவுகள் அடிக்கடி வருகின்றது என்றால் ஏதாவது நேர்த்திக்கடன் பாக்கி இருக்கின்றதா என சற்று சிந்தித்துப்பாருங்கள்.
கனவில் பாம்பு விரட்டுவதை போன்று கனவு வந்தால் வறுமை ஏற்படப்போகிறது என்று அர்த்தம். இந்த மாதிரியான கனவு வந்தால் நிதி விடயங்களில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டியது அவசியம்.சிவன் வழிபாடு செய்வது உங்களை பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கும்.
பாம்பு உங்கள் காலைச்சுற்றி பின்னிக்கொள்வது போன்ற கனவு வருகின்றது என்றால் உங்கள் ராசியின் பிரகாரம் சனிபகவான் ஆட்சி ஆரம்பிக்கப்போகின்றது. அதாவது சனி பிடிக்கப்போகின்றார் என்று அர்த்தம்.
பாம்பு கடிப்பதை போன்ற கனவு வந்தால் அது நல்ல சகுனமாக பார்க்கப்படுகின்றது. நீண்ட காலம் பிடித்திருறந்த தோஷங்கள் உங்களை விட்டு விலகப்போகின்றது என்று பொருள்.
நீண்ட நாள் எதிர்ப்பார்த்து காத்திருந்த விடயங்கள் நிஜமாகப்போகிகின்றது என்பதையே இது வலியுறுத்துகின்றது.
பாம்பு உங்கள் வீட்டிற்குள் நுழைந்து எந்த தொந்தரவும் செய்யாமல் வெளியேறுவதை போன்று கனவு கண்டால் நீங்கள் நேர்த்திகடனை விரைவில் செலுத்த வேண்டும் குலதொய்வம் கோபமாக இருக்கின்றது என்று அர்த்தம்.
பாம்பு உங்களின் தலைக்கு மேல் குடை பிடிப்பது போன்ற கனவு வருகின்றது என்றால் இறைவனின் முழுமையான பாதுகாப்பின் கீழ் நீங்கள் இருக்கின்றீர்கள் என்று அர்த்தம். கடவுளின் ஆசீர்வாதம் முழுமையாக இருக்கின்றது என்பதே இதன் அர்த்தம்.
பாம்பு யார் மீதாவது ஏறிச்செல்வது போல கனவு வந்தால் தொழில் ரீதியில் சிறந்த முன்னேற்றம் ஏற்படடப்போகின்றது என்றும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கப்போவதை முன்கூட்டியே தெரிவிப்பதாகும்.
கனவில் நீங்கள் ஒரு பாம்பை கொன்றாலோ அல்லது பாம்பு இறந்து கிடப்பதை போன்ற கனவை கண்டாலோ வரவிருந்த பெரிய ஆபத்தில் இருந்து தப்பிவிட்டீர்கள் என்று அர்த்தம். இருப்பினும் சற்று அவதானமாக செய்ற்பட வேண்டும்.