விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்… அப்பளம் போல் நொறுங்கிய கார்

பிரபல நடிகர் சம்பத் ராம் கார் விபத்தில் சிக்கியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சம்பத் ராம்

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் தான் சம்பத் ராம். இவர் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான எத்தனை மனிதர்கள் என்ற சீரியல் மூலம் தனது நடிப்பினை ஆரம்பித்தார்.

பின்பு ஷங்கர் இயக்கத்தில் வெளியான முதல்வன் திரைப்படத்தில் பொலிஸ் அதிகாரியாக நடித்து பிரபலமானார்.

இதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து பிரபலமானார். பெரும்பாலான படங்களில் வில்லன் மற்றும் பொலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

சமீபத்தில் தமிழில் வெளியான தங்கலான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் சென்ற கார் சென்னை கிண்டி அருகே விபத்துக்குள்ளாகி உள்ளது. பின்னால் வந்த லாரி மோதியதில் இவருடைய காரின் பின்பக்கம் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், காரில் பயணித்த சம்பத்ராம் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

இதைத்தொடர்ந்து சிகிச்சைக்கு பின்னர் அவர் நலமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மறக்காமல் இதையும் படியுங்க   ஆண்களை கெடுப்பது பெண்கள் தான்.. அவ்வளவு மோசமான உடை- சர்ச்சை பேச்சில் சிக்கிய சீரியல் நடிகை
Shares