புதக் கிரகமானது சிம்ம ராசியில் நுழைவதால் அதிர்ஷ்டத்தில் பிரகாசிக்கும் ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
புதன்
நவக்கிரகங்களில் புதன் பகவான் இளவரசன் என்று அழைக்கப்படும், இந்த கிரகமானது சுபநிலையில் இருக்கும் போது, அந்த நபருக்கு சுப பலன்கள் கிடைக்கும்.
ஜோதிடத்தில் புதன் பகவானுக்கு தனி இடம் உண்டு. புதன் புத்திசாலித்தனம், தர்க்கம், உரையாடல், கணிதம் மற்றும் நட்பு ஆகியவற்றின் காரணியாக இருக்கிறார்.
வரும் செப்டம்பர் 4ம் தேதி, புதன் பகவான் கடக ராசியிலிருந்து சிம்ம ராசியில் நுழைகின்றார். இதனால் எந்தெந்த ராசியினர் அதிர்ஷ்டத்தில் பிரகாசிப்பார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.
மேஷம்
சிம்ம ராசியில் நுழையும் புதனால், மேஷ ராசியினருக்கு சொத்து மூலம் வருமானம் கிடைப்பதுடன், தாயிடமிருந்து செல்வத்தை பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
பணியிடத்தில் வேலைப் பகுதியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு ஏற்படவும், வருமானமும் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குழந்தைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும்.
உத்தியோகஸ்தர்களுக்கு சகப்பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். பணி நிமித்தமாகப் பல்வேறுப் பகுதிகளுக்குப் பயணம் மேற்கொள்வீர்கள்.
மிதுனம்
புதனின் ராசி மாற்றத்தினால் மிதுன ராசியினருக்கு மகிழ்ச்சி அதிகரிப்பதுடன், பெற்றோரின் ஆதரவு, பிள்ளைகளில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
வருமானம் அதிகரிப்பதுடன், பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. புண்ணிய பயணம் செல்லும் வாய்ப்புகளும் உண்டு. நிறைய பேர் பசியைப் போக்குவீர்கள். உங்களது கோபம் குணம் குறைந்து நிதானம் பெருகும். உங்களது கோபத்தால் விலகிப்போனவர்கள் மீண்டும் சேர்வார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்குள் புதன் நுழைவதால், சிம்ம ராசியினருக்கே தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன், வேலையில் உற்சாகமும் கிடைக்கும். தொழில் புரியும் இடங்களிலும் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.
மன அமைதி கிடைக்கும். பணியில் புதிய பொறுப்புகள் அதிகரிக்கும். இடமாற்றமும் உண்டாகும். உங்களைப் பிடிக்காதவர்களுக்குக் கூட உங்களைப் பிடிக்க ஆரம்பிக்கும். இல்லறத்துணையுடன் இருந்த பிணக்குகள் தீரும். இருவருக்குள்ளும் அன்பு அதிகரிக்கும்.