ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரக நிலையில் ஏற்படும் மாற்றமானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.
அந்தவகையில் கிரகங்களின் அதிபதியான சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் வீட்றிருக்கின்றார். இந்நிலையில் குரு பகவான் ரிஷப ராசியில் இருக்கின்றார். மேலும் கிரகங்களின் தளபதியான செவ்வாய் நேற்று ஆகஸ்ட் 26 ஆம் திகதி மிதுன ராசிக்கு இடம்பெயர்ந்துள்ளார்.
இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கை குறிப்பாக செவ்வாய் பெயர்ச்சியானது குறிப்பிட்ட சில ராசியினருக்கு எல்லா வகையிலும் சாதக பலன்களை கொடுக்கப்போகின்றது.
நிதி ரீதியில் எதிர்ப்பாராத முன்னேற்றம் கிட்டப்போகின்றது. 99 ஆண்டுகளுக்கு பின்னர் இணையும் 3 கிரகங்களால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சேர்க்கை அதிர்ஷ்டத்தை வாரிவழங்கப்போகின்றது. மேஷ ராசியின் 5 ஆவது வீட்டில் சூரியனும், 2 ஆவது வீட்டில் குருவும், 3 ஆவது வீட்டில் செவ்வாயும் அமைவதால் வாழ்வில் இதுவரையில் இருந்துவந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
தொழில் ரீதியில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். பணத்துக்கு தட்டுபாடு அரவே இருக்காது. எதிர்பாரத வகையில் பணவரவு மற்றும் பரிசுகள் என மனம் மகிழ்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் கூடி வரும்.
மகரம்
மகர ராசியை பொருத்தவரையில் 5 ஆவது வீட்டில் குருவும், 5 ஆவது வீட்டில் சூரியனும், 6 ஆவது வீட்டில் செவ்வாயும் அமைந்திருப்பதால் பல்வேறு வழிகளிலும் நன்மைகள் நடைபெறும்.
இவர்களுக்கு ஏழரை சனியின் கடைசி கட்டம் நடந்து கொண்டிருப்பதால், எதிர்பாராத பணவரவுகள் கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. மொத்தத்தில் இவர்களுக்கு பொற்காலம் என்றே கூற வேண்டும்.
துலாம்
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகின்றது. இந்த ராசியின் 11 ஆவது வீட்டில் சூரியனும், 8 ஆவது வீட்டில் குருவும், 9 ஆவது வீட்டில் செவ்வாயும் அமைந்திருப்பது தொழில் ரீதியில் வெற்றியை கொடுக்கப்போகின்றது.
திரமண வாழ்வில் இருந்து வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப்போகின்றது. மேலும் திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கூடி வரும். நிதி நிலையில் உச்சத்தை தொடப்போகும் காலகட்டமாக இது அமையப்போகின்றது. பல்வேறு வழிகளிலும் வருமானம் வரக்கூடிய சாதகமான வாய்ப்புகள் அமையும்.