Thyroid symptoms: நாள்பட்ட நோய்களை உண்டுபண்ணும் தைராய்டு சுரப்பி- இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை

தற்போது இருக்கும் அவசர உலகில் மன அழுத்தம் இல்லாத மனிதர்களே பார்க்க முடியாது.

தினந்தோறும் ஏராளமான ஆரோக்கிய பிரச்சனைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். ஆனால் இதற்கு சிலர் மட்டுமே முறையான மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்து கொண்டிருக்கிறார்கள்.

மாறாக பெரும்பான்மையினர் தாங்களாகவே ஏதாவது ஒரு மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டு, வேலைகளை பார்த்து கொள்கிறார்கள். அதன் பின் நிலைமை மோசமான பிறகே மருத்துவரை சந்திக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக உடலுறுப்புக்களில் ஏதேனும் பிரச்சனையாக இருந்தால் ஆரம்பத்தில் மருத்துவரை சந்திப்பது சிறந்தது.
தைராய்டு சுரப்பி

அப்படி நமது உடலில் மிகவும் முக்கியமான ஒரு சுரப்பியாக தைராய்டு சுரப்பி பார்க்கப்படுகின்றது. இந்த சுரப்பி கழுத்துப் பகுதியில் பட்டாம்பூச்சி வடிவில் அமைந்திருக்கும்.

இந்த சுரப்பியில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்கள் இதயம், மூளை, தசைகள் மற்றும் பிற முக்கிய உறுப்புக்களுக்கு சென்று செயற்பாட்டை மேம்படுத்துகின்றது. இப்படிப்பட்ட சுரப்பில் சில சமயங்களில் பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனை “ஹைப்போ தைராய்டு” என்கிறார்கள்.

ஹைப்பர் தைராய்டிசம் என்பது தைராய்டு சுரப்பியில் போதுமான அளவு ஹார்மோன்கள் உற்பத்தி செய்யப்படாமல் இருக்கும் நிலையை குறிக்கிறது. இதனை ஒரு சில அறிகுறிகள் வைத்து கண்டறியலாம்.

இதன் அறிகுறிகளை கவனித்த உடனே அதற்கான சிகிச்சைகளை செய்ய ஆரம்பிக்க வேண்டும். இதனை கண்டுக்கொள்ளாவிட்டால் காலப்போக்கில் உடலில் பல்வேறுப்பட்ட பிரச்சினைகள் ஏற்படக் கூடும்.

அந்த வகையில், ஹைப்போ தைராய்டு பிரச்சினையை கண்டறியும் அறிகுறிகள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

ஹைப்போ தைராய்டு பிரச்சினையின் அறிகுறிகள்

1. உங்களுடைய உடல் எடையில் திடீர் மாற்றம் ஏற்படும். எந்தவித காரணமின்றி எடை அதிகரிக்கும். இப்படியான நிலை உங்களுக்கு தெரிந்தால் உடனே மருத்துவரை நாடுவது சிறந்தது. ஹைப்போ தைராய்டின் ஏற்படும் போது உடல் போதுமான தைராய்ஸின் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்படும். இதன் விளைவாக உடலில் இருக்கும் மெட்டபாலிசம் குறைந்து, உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும்.

2. உங்களின் தோற்றத்திலும் ஒரு சில மாற்றங்கள் ஏற்படும். அதாவது உங்களின் தலைமுடி பலவீனமாகும், அதிகம் வறண்டு இருக்கும், உடைந்து விழும், சருமத்தில் அரிப்பு, எரிச்சல், தடிப்புகள் ஏற்படும், மூட்டுகளில் வீக்கம், முகம் மற்றும் கழுத்துப் பகுதி வீக்கம் உள்ளிட்ட அறிகுறிகள் உங்களின் தோற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். இப்படி தெரிந்தால் உடனே மருத்துவரை நாடுவது சிறந்தது.

3. தைராய்டு பிரச்சினையால் உங்களின் வெளித் தோற்றத்தை தவிர்த்து உள்ளுக்குள் இருக்கும் மனநிலையிலும் அடிக்கடி ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். திடீரென அடிக்கடி மனநிலையில் பதட்டம் ஏற்படும், மனக் கவலை அதிகரிக்கும், எரிச்சலுணர்வு மற்றும் மன அழுத்தம் ஏற்படும். இப்படியான அறிகுறிகள் இருந்தால் உரிய மருத்துவரை நாடுவது சிறந்தது.

4. வழக்கத்திற்கு மாறாக உடலில் சோர்வு ஏற்படும், களைப்பை, உடல் பலவீனமாக இருப்பதை உணர்வீர்கள். இப்படி இருந்தால் உங்களின் தைராய்டு ஹார்மோன்களை பரிசோதிப்பது நல்லது. உடலில் போதுமான அளவு தைராக்ஸின் ஹார்மோன்கள் சுரக்காமல் இருந்தால் உடம்பிலுள்ள தசை பலவீனமடையும். இதன் காரணமாகவே உடல் சோர்வடையும்.

5. தைராய்டு சுரப்பி பிரச்சினை இருப்பவர்கள் மிகுந்த குளிர் அல்லது வெப்பத்தை சந்திக்க நேரிடும். மற்றவர்கள் இல்லாமல் உங்களுக்கு மட்டும் இந்த மாதிரியான உணர்வை அடிக்கடி சந்தித்தால் உடனே மருத்துவரை நாடுவது சிறந்தது. உடலை பரிசோதித்து உரிய மருந்துவில்லைகளை எடுத்து கொள்ளலாம்.

6. பெண்களுக்கு தைராய்டு சுரப்பியில் பிரச்சினை ஏற்படும் போது அது அவர்களின் மாதவிடாய் சுழற்சியில் மாற்றத்தை ஏற்படுத்தும். மருத்துவர்களின் கூற்றுப்படி, உடலில் போதுமான தைராக்ஸின் சுரக்காத போது, ஓவுலேசன் காலத்தில் கருமுட்டை வெளியிடுவதில் சிக்கல் ஏற்படும். இந்த பிரச்சினையை கவனிக்காமல் விட்டால் கருச்சிதைவு மற்றும் ப்ரீக்ளாம்ப்சியா போன்ற பிரச்சனைகளை சந்திக்கலாம்.

Shares