கேதுவின் பயணம்: 2025 வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் மூன்று ராசிகள்

கேது பகவான் கன்னியில் பயணம் செய்ய போகிறார் இது பல ராசிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். கேது நவகிரகங்களின் அசுப நாயகனாக விளங்க கூடியவர். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர்.

இவர் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர் ஆவார். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். கேது பகவானின் ஒவ்வொரு அசைவும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் கேது பகவான் கன்னி ராசியில் தனது பயணத்தை தொடங்கினார். வரும் 2025 வரை இதே ராசியில் அவர் பயணம் செய்வார்.

கேது பகவானின் கன்னி ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷ ராசி

ராசியில் முதலில் நீங்கள் இடம்பெறுவதால் எந்த கிரகத்தின் பயணமும் உங்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். இதன்படி உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் கேது பயணம் செய்கிறார். இதனால் உங்களுக்கு நல்ல யோகம் மட்டுமே கிடைக்கும்.

உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். ஒரு வேலையை நீங்கள் நீண்ட காலமாக முடிக்காமல் இருப்பீர்கள் அது உங்களுக்கு இந்த கால கட்டத்தில் முடிவு பெறும். இதனால் நீங்கள் சமூகத்தில் மதிப்புடையவர்களாக அறியப்படுவீர்கள்.

புதிய வேலைவாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் மகிழ்ச்சி உங்களைத் தேடி வரும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். உங்களை பொறுத்தவரை நீங்கள் சிறப்பாக இருக்க போகிறீர்கள்.

கடக ராசி

உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் கேது இருக்கிறார். இதனால் உங்களுக்கு 2025 வரை அதிக நன்மைகள் கிடைக்கும். பெரிய வேலைகளை நீங்கள் பயம் இல்லாமல் தொடங்கலாம் இதனால் வெற்றி நிச்சயம்.

தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். கவலைகள் அனைத்தும் மறந்து இருக்கப் போகிறீர்கள். புதிய முயற்சிகள் முழு பலங்களையும் பெற்று தரும்.

வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். கனவு உங்களுக்கு சிறப்பாக இருக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். முழுமை அடைவதற்கான நல்ல வாய்ப்பு உங்களுக்கு உண்டு.

விருச்சிக ராசி

உங்கள் ராசியில் 11 ஆம் வீட்டில் கேது பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். ஞானம் மற்றும் கல்வியில் சிறந்து விளங்குவீர்கள்.

நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். நீங்கள் செய்து கொண்டிருக்கின்ற வேலைகள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொண்டால் உங்களுக்கு பணவரவு அதிகமாகும்.

மறக்காமல் இதையும் படியுங்க  2025-ஐ புரட்டிப் போடப் போகும் சனி-குரு பெயர்ச்சி.. ராகுவோடு சேரும் கேது- இனி என்ன நடக்கும்?

கேது பகவானின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். ஒரு சில மனஸ்தாபங்கள் நண்பர்களுடன் இருந்தாலும் ஆபத்தில் அவர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். மகிழ்ச்சி நிலவி வரும் கால கட்டம் இது.

Shares