நாம் செய்யும் பாவ வினைகளுக்கு ஏற்ற வகையில் நமக்கு நன்மை தீமைகைளை தரக்கூடியவர் தான் கனி பகவான். இவா இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். சனி பகவான் இவர் தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். சனி பகவான் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக உள்ளார்.நாம் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்பவே அவரது பலன்கள் இருக்கும்.
சனி பகவானின் தாக்கம், நம்மை கடினமாக உழைக்கவும், பொறுமையாக இருக்கவும் கற்றுத்தருகிறது. அந்த வகையில் இவர் வக்ரமடையும் போது சில ராசிகளுக்கு அது நன்மைத ருகின்றது.
தற்போது சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பம் ராசியில் வக்ரம் பெற்று உள்ளார். கடந்த ஜூன் 19ஆம் தேதி கும்பம் ராசியிலேயே வக்ரம் பெற்ற நிலையில் சனி பகவான் உள்ளார். வக்ர சனி தொடங்கி உள்ள நிலையில் நவம்பர் 4ஆம் தேதி வரை சனி பகவான் வக்ர நிலையில் இருப்பார். இதன் மூலம் பலன் அடையும் ராசிகளை தற்போது பார்க்கலாம்.
மேஷம்
இந்த சனியின் வக்ர நிலை உங்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். இதனால் நீங்கள் மிகவும் தன்னம்பிக்கை உடையவர்களாக இருப்பீர்கள். உத்தியோகத்தில் நீங்கள் நினைத்த பதவி கிடைக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் கடின உழைப்பு உழைக்கும் ஒரு உழைப்பாளியாக இருப்பதால் அது உங்களுக்கு முழு பலனையும் தரும். பல பரிட்சை போட்டிக்கு தயாராகி வருபவர்கள் நல்ல பலனை பெறுவீர்கள். எதிர்பாராத நிதி ஆதாயம் கிடைக்கும். மொத்தத்தில் நீங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சனியின் நிலை மிகவும் சுபமாக இருக்கப் போகிறது. இந்த தாக்கத்தால் நீங்கள் லாபத்தை பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பதில் மிகவும் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். நீங்கள் வியாபாரிகளாக இருந்தாலும் அது உங்களுக்கு லாபத்தை மட்டும் குவிக்கப்போகிறது. மக்கள் உங்களால் ஈர்க்கபடுவார்கள் இதனால் பல லாபம் வந்து சேரும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
மகரம்
மகரம் ராசிக்காரர்களுக்கு சனியின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். பணம் சம்பாதிக்க புதிய வழிகள் புலப்படும். பணவரவு நன்றாக இருக்கும். உங்கள் நிதி நிலையில் நீங்கள் கூடிய கவனம் செலுத்துபவராக இருப்பதால் உங்கள் நிதி மேம்படும். இந்த காலகட்டத்தில், நீங்கள் நீதிமன்றத்தில் ஏதாவது வழக்கு தொடர்ந்து இருந்தால் உங்களுக்கு அது சாதகமாக இமையும் என கூறப்படுகின்றது. கூட்டுத் தொழிலில் லாபம் உண்டாகும். ஆரோக்கியத்தில் பிரச்சனை வராமல் உடல் நிலை நன்றாக இருக்கும்.