சனி பகவானின் பெயர்ச்சியானது மூன்று ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் நிலையில், எந்தெந்த ராசி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சனி
நீதியின் கிரகமாக விளங்கும் சனி பகவான், தான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கின்றார்.
நன்மைகள் தீமைகள் எதுவாக இருந்தாலும் இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கும் நிலையில், சனி பகவான் என்றால் பலருக்கும் பயம் தான் ஏற்படும்.
மெதுவாக நகரும் கிரகமாக இருக்கும் சனி ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்வதற்கு இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கின்றார்.
தற்போது 30 ஆண்டுகளுக்கு பின்பு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வரும் நிலையில், இந்த மாற்றம் அனைத்து ராசியினருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் சனி பகவான் ஆகஸ்ட் 18ஆம் தேதி பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்த சனி பகவானால் நன்மையை மட்டும் பெறும் அதிர்ஷ்ட ராசியினரை இங்கு தெரிந்து கொள்வோம்.
மேஷ ராசி
மேஷ ராசியினைப் பொறுத்தவரையில் சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வருமானத்தில் உயர்வை கொடுப்பதுடன், நிதி நிலையிலும் முன்னேற்றம் ஏற்படும்.
வணிகத்திலும் இரட்டிப்பான முன்னேற்றமும், புதிய வருமானத்திற்கான ஆதாரங்களும் கிடைக்கும். குடுமபத்திலும் மகிழ்ச்சி ஏற்படுவதுடன், உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல் அனைத்தும் குறையுமாம்.
கும்ப ராசி
கும்ப ராசிக்கு சனியின் இந்த நட்சத்திர மாற்றம் சாதகமாக அமைவதுடன், ராஜயோகமும் கிடைக்கின்றது. தன்னம்பிக்கை, ஆளுமை திறமை மேம்படுவதுடன், புதிய முதலீடும் நல்ல பலனைக் கொடுக்கும்.
நிதி நிலையில் முன்னோற்றம், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி, துணையின் முழு ஆதரவு கிடைப்பதுடன், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணமும் விரைவில் கைகூடும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.
ரிஷப ராசி
ரிஷப ராசியில் சனியின் இந்த நட்சத்திர மாற்றமானது நல்ல பலன்களை அளிக்கின்றது. பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதுடன், அலுவலகத்திலும் உயர் பதவியிலிருப்பவர்களின் தயவு கிடைக்கும்.
வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதுடன், சனி பகவானின் அருளால் நிதியில் நல்ல முன்னேற்றம், பெற்றோர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.