12 ஆண்டுகளுக்கு பின் வரும் குருயோகம் நல்ல நேரம் எந்த ராசிகளுக்கு?

குருபகவான் எல்லா நன்மைகளையும் அள்ளி தருவார். இதனாலேயே நவக்கிரகங்களில் யோக நாயகனாக விளங்க கூடியவர். குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

முன்பு ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார், இப்போது செவ்வாய் நட்சத்திரத்தில் செல்கிறார். அந்த வகையில் இந்த குருபகவானால் உண்டாகப்போகும் யோகத்தை அனுபவிக்கும் ராசிகள் யார் என்பதை பார்க்கலாம்.

12 ஆண்டுகளுக்குப் பிறகு யோகம்

குரு ரோகிணி நட்சத்திரத்தில் இருந்து மிருகசீரிடம் நட்சத்திரத்தில் நுழைவார். செவ்வாய் ராசியில் உள்ள குரு பல ராசிகளுக்கு நன்மை செய்வார். இதன்போது 1.மேஷத்தில் பிறந்தவர்கள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.

நீண்ட காலமாக பணப்பிரச்சனையை சந்தித்து வந்திருப்பீர்கள் அது தற்போது இல்லாமல் போகும்.இப்போது தான் நீங்கள் பணத்தை சிக்கனமாக கையாளுவீர்கள். ஆனால் சில நேரங்களில் ராகுவின் பெயர்ச்சி உங்களை பிரச்சனையில் மாட்ட வைக்கும் என்பதால் நீங்கள் ஒவ்வொரு சின்ன விஷயத்திலும் கவனமாக இருப்பது நல்லது.

2.ரிஷப ராசியில் குரு பெயர்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், உங்களுக்கு குறைவான பிரச்சினைகள் இருக்கும். ஆனால் முடிந்தவரை இந்த நேரத்தை சரியான முறையில் கையாளுங்கள். கடினமாக உழையுங்கள் வெற்றி நிச்சயம்.

3.தனுசு ராசிக்காரர்களுக்கு சொல்லவே வேண்டாம். இவர்கள் முழுக்க முழுக்க சமூகத்தில் மதிக்கப்படுவார்கள். கடினமாக உழையுங்கள். அதிஷ்ட பலனை தேடி செல்ல தேவை இல்லை அது உங்களை தேடி வரும்.

முடிந்தவரை மகிழ்ச்சியாக இருக்க இந்த நேரம் உங்களுக்கு கற்றுத்தரும். புதிய பொறுப்பு கிடைக்கும். வியாபாரம் நன்றாக நடக்கும். வீடு, வாகனம் வாங்க முடியும். இந்த ரோகினி நட்சத்திர குருப்பெயர்ச்சி இந்த மூன்று ராசிகளுக்கும் நல்ல நேரத்தை கொடுக்கப்போவதால் இந்த நேரத்தை முடிந்தவரை இந்த ராசிகள் பயன்படுத்தி கொள்வது நல்லது.

மறக்காமல் இதையும் படியுங்க   கேந்திர திரிகோண ராஜயோகம்: செப்டம்பர் மாதம் முதல் அதிர்ஷ்டம் பெருகப் போகும் ராசிகள்
Shares