பொதுவாக ஆண், பெண் என இருபாலாரும் தலைமுடி ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.
நவீன வாழ்க்கை முறை, மன அழுத்தம், ஆரோக்கியம் குறைபாடு ஆகிய காரணங்களால் தலைமுடி பாதிப்படைகிறது.
இதனால் முடி உதிர்தல், பொடுகு, நரை முடி போன்ற பிரச்சனைகளை தினந்தினம் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
வெளியில் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் நாம் உணவில் அதனை கட்டுபடுத்த முடியும். ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் காரணமாக தலைமுடி தொடர்பான பிரச்சினையை கட்டுக்குள் வைக்கலாம்.
அதே சமயம் வீட்டிலுள்ள சில பொருட்களை கொண்டு வீட்டு வைத்திய குறிப்புகளை பின்பற்றலாம். இது தலைக்கு ஆரோக்கியம் தந்து முடியை நன்கு வளரச் செய்யும்.
அந்த வகையில், பழங்கால நடைமுறை முடி, தேநீர் தண்ணீர் கலந்து தலைமுடியை அலசினால் முடி உதிர்வுக்கு நிரந்தர தீர்வை பெறலாம். இது தொடர்பாக தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேநீரில் முடியை பராமரிப்பது எப்படி?
- முதலில், பிடித்தமான தேநீரை தெரிவு செய்து அதனை அடுப்பில் வைத்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து காய்ச்சி கொள்ளவும்.
- காய்ச்சிய தேநீரை அறை வெப்பநிலையில் குளிர்விக்க வேண்டும்.
- தலைமுடியை ஷாம்பு போட்டு நன்றாக கழுவிய பின்னர் தேயிரை தண்ணீரால் தலையை அலசவும்.
- உச்சந்தலையில் மெதுவாக மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவுவதற்கு முன் சில நிமிடங்கள் விட்டு விடுங்கள்.
- சிறிது நேரத்திற்கு பின்னர் நன்றாக தலைமுடியை அலசவும்.