சனி பகவான் நீதியின் கடவுளாவார். நாம் செய்யும் கரும வினைக்கு ஏற்ப இவர் நமக்கு பலனை தருவார். ஆனால் இவர் சூரியனுடன் பயணித்தால் அதினமாக பலவீனமடைகிறார்.
நாம்செய்யும் நன்மையின் அடிப்டையில் தான் அவர் நமக்கு நன்மையும் தீமையும் தருவார். இவர் நினைத்தால் எந்த பிரச்சனையும் இல்லாமல் உங்களை மகிழ்விப்பார். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செல்வத்தையும் வாரி வழங்குவார்.
இவர் ஒரு ராசியில் இருந்து இன்னுமொரு ராசிக்கு செல்லும் போது அது பல ராசிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஆனால் இந்த முறை சனி ஒரு ராசியில் இருந்து கொண்டே பலவீனமடையப்போகிறார் அது எந்த ராசி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சனியின் தாக்கம்
ஒருவரின் ஜாதகத்தில் சனி குறைந்த பலனை தருவார் கூடிய பலனையும் தருவார். சனியின் தாக்கம் அதிகமாக இருந்தால் இகற்கு நிறைய காரணங்கள் இருக்கும். ஒருவரின் ராசியில் சனி பலவீனமாக இருந்தால், அவர்கள் செய்யும் எந்த காரியமும் வெற்றி பெற தாமதமாகும்.
இதே நேரம் ஜாதகத்தில் சனி உச்சம் பெற்றிருந்தால், ஒரு சிறிய வேலையை செய்தால் கூட, நீங்கள் உடனடியாக வெற்றி பெறுவீர்கள். சனி மிகவும் மெதுவாக பெயர்ச்சி அடையும் கிரகம். இதனாலேயே நாம் இவரிடம் மெதுவாக தண்டிக்கப்படுகிறோம்.
சனி பகவான் உங்களுக்கு விருப்பமானால் உங்களை செல்வந்தராக்கி, எந்த பிரச்னையும் இல்லாமல் உங்களை மகிழ்விப்பார். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செல்வத்தையும் வாரி வழங்குவார்.
வேத ஜோதிடத்தின் படி, சனி பகவான் அனைவருக்கும் நீதி வழங்குகிறார். சனி பகவானின் ஆசி கிடைத்தால் எல்லாம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நாமது செயல்களால் மட்டுமே சனியை மாற்ற முடியும், உங்கள் செயல்கள் நன்றாக இருந்தால், சனி உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பார்.
எனவே, சனியைக் கண்டு பயம் அடையத் தேவையில்லை, செயல்களை சரி செய்தால் போதும். இந்த முறை சனி மேஷத்தில் பலவீனமாக இருக்கிறார். இதற்கு காரணம் இந்த ராசியில் சூரியன் உச்சம் பெற்றிருக்கிறார்.
சூரியன் இருக்கும் இடத்தில் சனி பலவீனமடைவார். எனவே மேஷத்தில் பிறந்தவர்கள் சோம்பேறித்தனத்தை கைவிட வேண்டும். இவர்களுக்கு எளிதாக எதுவும் கிடைப்பதில்லை. இதற்காக, நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும்.
யாருடைய கடின உழைப்பையும் பயன்படுத்திக் கொள்ள கூடாது. மிகவும் உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்களை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்திருக்க முயற்ச்சி செய்யுங்கள்.